கொரோனா தடுப்பு பணிகள் குறித்து வரும் 21-ந் தேதி கன்னியாகுமாரியில் முதலமைச்சர் ஆய்வு

11 September 2020, 11:26 pm
Quick Share

சென்னை: கொரோனா தடுப்பு, வளர்ச்சி பணிகள் குறித்து வரும் 21-ந் தேதி கன்னியாகுமாரி மாவட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு மேற்கொள்கிறார்.

கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்ய மாவட்டங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முதலமைச்சர் பழனிசாமி, அதிகாரிகளுடன் நேரடியாக சென்று ஆய்வு செய்து வருகிறார். இதுவரை 15 க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு சென்ற முதலமைச்சர் கொரோனா பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டதோடு,

அம்மாவட்டங்களுக்கு தேவையான வளர்ச்சி திட்டப் பணிகளுக்கும் நிதி அளித்து வருகிறார். இந்நிலையில் கொரோனா தடுப்பு, வளர்ச்சி பணிகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு செய்ய வருகிற 21-ந் தேதி கன்னியாகுமரிக்கு வருகை தருகிறார். முதலமைச்சர் வருகையொட்டி மாவட்டத்தில் முன்னேற்பாட்டு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக அதிகாரிகள் நேற்று ஆலோசனை நடத்தினர்.

Views: - 7

0

0