கடந்த மாதம் 29-ம் தேதி வேலூர் மாவட்டத்தில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். நிகழ்ச்சிக்குப் பிறகு சென்னை திரும்பிய முதல்வருக்கு வேலூர் மாநகரத்திற்குட்பட்ட சேண்பாக்கம் பகுதியைச் சேர்ந்த எம்ஜிஆரின் தீவிர ரசிகரான ஆட்டோ ஓட்டுனர் பன்னீர்செல்வம் முதல்வருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், மாண்புமிகு முதல்வர் அவர்களே… நீங்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற போது எனக்கு வாக்களித்த மற்றும் எனக்கு வாக்களிக்காத மக்களின் நம்பிக்கையையும் காப்பாற்றும் விதத்தில் ஆட்சி செய்வேன் என்று கூறி இருந்தீர்கள்.
அந்த வகையில் உங்களின் சிறப்பான ஆட்சிக்கு உங்களுக்கு வாக்களிக்காத எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகரான இந்த பன்னீர் செல்வத்தின் வாழ்த்துக்கள்.
நீங்கள் வேலூர் வருகை தந்த போது எந்தவித போக்குவரத்து இடையூறுகள் இல்லாமல் நாங்கள் நிம்மதியாக ஆட்டோ ஓட்டினோம். எங்கள் தொழில் எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. முக்கியமாக சொல்ல வேண்டுமென்றால் நீங்கள் வந்து சென்றதற்கான அறிகுறிகளே எங்களுக்கு தெரியவில்லை.
இவை அனைத்தும் தங்களின் உத்தரவின் பேரில்தான் நடந்திருக்கும் என்பதை நான் அறிகிறேன். மேலும் நீங்கள் பல நல்ல திட்டங்களை தந்து தமிழ்நாட்டை முன்னேற்றுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டு விட்டது. வாழ்த்துக்கள் ஐயா,” என குறிப்பிட்டு … கலைஞருடன் எம்ஜிஆர் இருக்கும் புகைப்படமும், எம்ஜிஆர் உடன் மு.க.ஸ்டாலின் இருக்கும் புகைப்படத்தையும் இணைத்து அனுப்பியிருந்தார்.
இந்த கடிதத்தை படித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்டோ ஓட்டுனர் பன்னீர் செல்வத்திற்கு தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து ஆட்டோ ஓட்டுநர் பன்னீர் செல்வத்திடம் பேசிய போது, எம்ஜிஆர் ரசிகனாகிய நான் முதல்வருக்கு எழுதிய கடிதத்திற்கு தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்த முதல்வரின் செயல் என் மனதில் நீங்கா இடம் பெற்று இருக்கிறது என நெகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.