2024 நாடாளுமன்ற தேர்தலை குறி வைத்து முதலமைச்சர் எடுத்த முடிவு : பாஜகவுக்கு எதிராக மாநிலத்தில் ஒரு கட்சி, மத்தியில் ஒரு கட்சி..!!

Author: Udayachandran RadhaKrishnan
4 October 2022, 9:29 am
New National Party - Updatenews360
Quick Share

தெலுங்கானா மாநிலத்தில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி முதல்வராக சந்திரசேகர ராவ் உள்ளார். வரப்போகும் 2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பா.ஜ., வை எதிர்க்க தேசிய அளவில் கூட்டணியை உருவாக்க திட்டமிட்ட சந்திரசேகர ராவ், சில மாதங்களுக்கு முன் பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் , சிவசேனா கட்சியின் உத்தவ் தாக்கரே என பல்வேறு எதிர்கட்சி தலைவர்களை சந்தித்தார்.

இந்நிலையில் லோக்சபா தேர்தலுக்கு முன்பாக தேசிய கட்சி துவங்க முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாயின. இதையடுத்து நாளை (அக்.05) தசாரா பண்டிகையையொட்டி புதிய தேசிய கட்சி குறித்த அறிவிப்பை சந்திரசேகரரராவ் வெளியிடுவார் என கூறப்படுகிறது.

இது குறித்து கட்சி வட்டாரங்கள் கூறியது, தேசிய அரசியலுக்காக கட்சி துவங்குவதால் அதற்கு ‛பாரத் ராஷ்ட்ர சமீதி’ என்ற பெயரில் கட்சி துவங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்னும் 2 வாரத்துக்குள் கட்சியின் செயற்குழு, பொதுக்குழு கூட்டி முடிவு எடுக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Views: - 323

0

0