56 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

Author: kavin kumar
7 January 2022, 10:08 pm
Quick Share

சென்னை: இலங்கை சிறையில் உள்ள 56 தமிழக மீனவர்களை விடுவிக்கவும், 75 மீன்பிடி படகுகளை மீட்டெடுக்கவும் வலியுறுத்தி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

முதலமைச்சர் எழுதிய கடிதத்தில், இலங்கைச் சிறைகளிலிருந்து தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை மேற்கொண்டமைக்காக மத்திய அரசுக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டதுடன் கடந்த 2021 டிசம்பர் 19 மற்றும் 20 ஆம் நாளிலிருந்து இலங்கை சிறைகளில் வாடிக் கொண்டிருக்கும் 56 மீனவர்களை விடுவித்து, பாதுகாப்பாக இந்தியாவுக்கு அழைத்துவர தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும், இலங்கை அரசின் காவலில் வைக்கப்பட்டுள்ள 75 மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பொங்கல் திருநாளை முன்னிட்டு, இலங்கை சிறைகளில் உள்ள 56 மீனவர்களை விடுவித்து அவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் மீண்டும் இணையும் நோக்கில் உயர்நிலைப் பேச்சுவார்த்தைகளை இலங்கை அரசாங்கத்துடன் நடத்திடக் கேட்டுக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

Views: - 406

0

0