திரைப்பட ஒளிப்பதிவு சட்டத் திருத்தம்… கடைசி நேரத்தில் நடிகர் சூர்யா காட்டிய சூப்பர் வேகம்… அதிர்ச்சியில் உறைந்த தமிழ் திரையுலகம்!!!

3 July 2021, 11:50 am
surya - updatenews360
Quick Share

அஞ்சாத சிங்கம்

நடிகர் சூர்யா, கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தின் தலை சிறந்த சமூக நீதி போராளியாக அவருடைய ரசிகர்களால் பேசப்பட்டும், போற்றப்பட்டும் வருகிறார். ஒரு சில அரசியல் கட்சிகளின் ஆதரவும் அவருக்கு உண்டு என்பதும் வெளிப்படை.

அதுவும் கடந்த ஆண்டு அவர் சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த ஒரு உத்தரவை மேற்கோள்காட்டி, அதை நீட் தேர்வுடன் தொடர்பு படுத்தி பேசிய பிறகு, ‘அஞ்சாத சிங்கம்’ என்ற பெயரும் அவருக்கு அடைமொழியாகி விட்டது.

தமிழகத்தில் சமூக ரீதியான பிரச்சினைகள் வெடிக்கும்போதெல்லாம் அரசியல்வாதிகளை மிஞ்சும் அளவுக்கு அதிரடியாக கருத்து தெரிவிப்பது, கடும் விமர்சனத்தை முன்வைப்பது அவருடைய வழக்கம். ஆனால் சமீப காலமாக நடிகர் சூர்யா நத்தை வேகத்தில் செயல்படுவதாக சமூக ஆர்வலர்கள் பரபரப்பு குற்றச்சாட்டு கூறப்படுகின்றனர்.

படுமந்தமான சிங்கம்

குறிப்பாக 2021 மே 1-ம் தேதிக்கு முன்பு அவரிடம் இருந்த சுறுசுறுப்பு சுணக்கம் கண்டு
படுமந்தமாகி விட்டது என்று தமிழ் திரையுலகினரும் அவரை போட்டு தாக்குகின்றனர்.

அதற்கு குறிப்பிட்டு கூறும்படியான காரணங்களும் சில உண்டு.

நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு செய்வதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் கடந்த மாதம் முதல் வாரம் தமிழக அரசு ஒரு ஆய்வுக் குழுவை அமைத்தது. இந்தக் குழு பொதுமக்களும் தங்களிடம் கருத்துகளை தெரிவிக்கலாம் என்று 19-ந் தேதி அறிவித்தது.

NEET_2021_UpdateNews360

நீட் தேர்வு என்றாலே புலிப்பாய்ச்சல் காட்டும் சூர்யா இந்தக் குழுவிடம் அடுத்த நிமிடமே தனது கருத்தை ஆவேசமாக பதிவு செய்வார் என்று நினைத்தவர்களுக்கு பெருத்த ஏமாற்றமே மிஞ்சியது.

ஆழ்ந்த தூக்கத்திலிருந்து கும்பகர்ணன் திடீரென்று விழித்தெழுந்ததுபோல் அவர், ஆற அமர 2 நாள் கழித்தே தனது கருத்தை பதிவிட்டார். மற்றவர்களும் உடனடியாக நீட் தேர்வின் பாதிப்பை பதிவு செய்யும்படி கேட்டுக்கொண்டார். இதில் வேடிக்கை என்னவென்றால் அடுத்த 2 நாட்களில் அந்தக் குழுவிடம் பொது மக்கள் கருத்து தெரிவிப்பதற்கான காலக்கெடு முடிவடைய இருந்ததுதான்.

நீட் தேர்வு என்றாலே சுடச் சுட பதிலடி கொடுக்கும் நடிகர் சூர்யா சரியாக 2 நாட்கள் கழித்து
கருத்து தெரிவித்தது கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவருடைய ரசிகர்களே கூட சூர்யாவுக்கு என்ன ஆனது? என்று குழம்பித்தான் போனார்கள்.

ஒளிப்பதிவு சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு

தற்போது அவருடைய அசுர வேகம் வெளிப்பட்டிருப்பது, மத்திய அரசு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ள ஒளிப்பதிவு சட்ட திருத்த மசோதா 2021 பற்றியது.

ஒளிப்பதிவு சட்டம் பிரிவு 5B (1)-ஐ மீறும் எந்தவொரு திரைப்படத்தின் சென்சார் சான்றிதழையும் புதிய பிரிவு 6 (1)-ன் படி, மத்திய அரசு திரும்பப் பெற முடியும். அதாவது சென்சார் போர்டே ஒப்புதல் அளித்திருந்தாலும் கூட மத்திய அரசு நினைத்தால் ஒரு படம் வெளியாவதைத் தடுக்க முடியும். சென்சார் போர்டின் முடிவை மறுபரிசீலனை செய்யவும் உத்தரவிட முடியும் என்பது இந்த சட்டத் திருத்தத்தின் முக்கிய அம்சம்.

இந்த மசோதாவில் சேர்க்கப்பட்டிருக்கும் இன்னொரு பிரிவான 6AA-யின் படி, “ஒரு படைப்பாளியின் எழுத்துபூர்வ அனுமதியில்லாமல், அதை நகல் எடுக்கவோ, அதை வீடியோவாகவோ, ஆடியோவாகவோ பதிவு செய்யவோ, ஒளிபரப்புச் செய்யவோ கூடாது. மீறினால் 3 மாதங்கள் முதல் 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், 3 லட்ச ரூபாய் அல்லது படத்தின் தயாரிப்புச் செலவில் 5 சதவீதம் வரை அபராதமும் வசூலிக்கப்படும்.”

இதேபோல் மேலும் சில முக்கிய விதிமுறைகள் இந்த சட்ட மசோதாவில் கூறப்பட்டிருந்தது.

இதுபற்றி கருத்து தெரிவிக்க கடைசி நாள் ஜூலை 2-ம் தேதி என்று கடந்த மாதம் 18-ந் தேதி மத்திய அரசு அறிவித்திருந்தது.

இது தொடர்பாக 4 நாட்களுக்கு முன்பு நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் வெற்றிமாறன், மலையாள இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணன், நடிகை நந்திதா தாஸ் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் தங்களது கருத்துகளை பதிவு செய்தனர்.

“இந்த ஒளிப்பதிவு சட்ட திருத்த மசோதா திரையுலகின் மீது விழுந்த இரண்டாம் அடி. திரைப்படத் தணிக்கை மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் 2 மாதங்களுக்கு முன்பு கலைக்கப்பட்டபோதே பலத்த முதல் அடி விழுந்துவிட்டது. இந்த புதிய சட்டதிருத்தம் மூலம் திரைத்துறையில் சென்சார் போர்டு, கோர்ட் என்ற இரண்டையும் கடந்து அதிக அதிகாரத்தை மத்திய அரசு பெற முயற்சிக்கிறது” என்று
தங்களின் கண்டனத்தை பதிவுசெய்தும் இருக்கின்றனர்.

தாமதமான எதிர்ப்பு

திரையுலகப் பிரபலங்கள் பெரும்பாலானோர் தங்களின் கருத்தை பதிவிட்ட நிலையில்
நடிகர் சூர்யா கடைசி நாளான ஜூலை 2-ந் தேதி மதியம் 2 மணி அளவில் ஒரு ட்வீட்டை பதிவிட்டார்.

அதில், “சட்டம் என்பது கருத்து சுதந்திரத்தை காப்பதற்காக. அதன் குரல்வளையை நெரிப்பதற்கு அல்ல. இன்றுதான் கடைசி நாள் உங்கள் எதிர்ப்பை தெரிவியுங்கள்” என்று பதிவிட்டு அந்த மசோதா குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிப்பதற்கான இணையதள பக்கத்தையும் பகிர்ந்திருந்தார்.

சூர்யாவின், இந்த சூப்பர் வேகம் கண்டு தமிழ் திரையுலகம் பிரமித்துப் போய் இருக்கிறது.

இதுகுறித்து திரையுலக பிரமுகர்கள் சிலர் கூறும்போது, “சமீபகாலமாக நடிகர் சூர்யா கொந்தளிப்பான பிரச்சினைகளில் கடைசி ஆளாக கருத்து தெரிவித்து, பரபரப்பை ஏற்படுத்துவதை வழக்கமாக வைத்துள்ளார். அதுவும், தான் சார்ந்த துறை சம்பந்தப்பட்ட ஒரு விஷயத்திற்கே கிளைமேக்ஸில் வருவதுபோல் வந்து பந்தா காட்டுகிறார். அவருக்கு என்ன ஆயிற்று என்பது புரியாத புதிராக உள்ளது. குறிப்பாக தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடப்பதற்கு முன்பாக அவர் காட்டிய புல்லட் ரயில் வேகம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. ஆனால் மே 2ம் தேதிக்கு பிறகு, அதாவது தேர்தல் முடிவுகள் வெளியான பின்பு அவருடைய நடவடிக்கைகள் நத்தை வேகத்தில் நகர்கின்றன.
அவருடைய சமூக அக்கறை கூர் மழுங்கிப் போய்விட்டதோ? என்று சந்தேகமும் ஏற்படுகிறது” என தங்களுடைய ஆதங்கத்தை கொட்டித் தீர்த்தனர்.

Views: - 200

0

0