முதலமைச்சர் பழனிசாமியுடன் அன்புமணி சந்திப்பு : வன்னியர்களுக்கு 20% இடஒதுக்கீடு குறித்து பேச்சுவார்த்தை..!!

1 December 2020, 1:56 pm
anbumani meet cm- updatenews360
Quick Share

சென்னை : வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு கோரி பாமகவினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், முதலமைச்சர் பழனிசாமியுடன் அன்புமணி ராமதாஸ் சந்தித்து பேசினார்.

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீத ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என வலியுறுத்தி சென்னையில் பாமக சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், கலந்து கொள்வதற்காக, ஒருங்கிணைந்த காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட எல்லைகள் வழியாக சென்னை நோக்கி சென்ற பாமகவினரை போலீசார் தடுத்து நிறுத்தி வருகின்றனர். மேலும், சென்னை புறநகர் ரயில்சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாசுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்தார். அதன்படி, சென்னை தலைமைச் செயலகத்திற்கு சென்ற அன்புமணி ராமதாஸ், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, வன்னியர்களுக்கு 20% இடஒதுக்கீடு குறித்த கோரிக்கை மனுவை அளிக்கப்பட்டதாக தெரிகிறது. அன்புமணியுடன் அக்கட்சியின் மூத்த தலைவர்களான ஜிகே மணி உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.

சென்னையில் பாமகவினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் அன்புமணி சந்தித்து பேசிய பிறகு, போராட்டம் வாபஸ் பெற வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.

Views: - 14

0

0