‘இப்படியா பரவாயில்லயே.. ..?’ முதலமைச்சர் பழனிசாமியின் அசையும்.. அசையா சொத்துக்களின் விபரம்..!!!

Author: Babu Lakshmanan
15 March 2021, 7:31 pm
Edappadi Palanisamy- Updatenews360
Quick Share

சென்னை : தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சொத்து மதிப்பு விபரம் தற்போது வெளியாகியுள்ளது.

சட்டப்பேரவை தேர்தலில் எடப்பாடி தொகுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 7வது முறையாக போட்டியிடுகிறார். இன்று அவர், கொரோனா விதிகளுக்குட்பட்டு, கூட்டத்தை சேர்க்காமல் 100 மீட்டருக்கு தனி ஒரு ஆளாக நடந்து சென்று வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

இந்த நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த வேட்புமனுவில் உள்ள விபரங்கள் பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

அதாவது, கடந்த 5 ஆண்டுகளில் அவரது சொத்து மதிப்பில் ஒரு கோடி ரூபாய் சரிந்துள்ளது. கடந்த 2016ம் ஆண்டில் ரூ.3.14 கோடியாக இருந்த அவரது அசையும் சொத்தின் மதிப்பு, தற்போது ரூ.2.01 கோடியாக குறைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல, 2016ல் அசையா சொத்தின் மதிப்பு ரூ.4.66 கோடியாக இருந்ததாகவும், தற்போது ரூ.4.68 கோடியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Views: - 130

0

0