நதிநீர் இணைப்பு குறித்து மத்திய நீர்வளத்துறை அமைச்சருடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை!!
18 August 2020, 1:45 pmசென்னை : நதிநீர் இணைப்பு தொடர்பாக மத்திய நீர்வளத்துறை அமைச்சருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி காணொளி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டார்.
தமிழகத்தில் பல்வேறு நதிநீர் திட்ட பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்துடன் காணொளி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் காவேரி, காவேரி – கோதாவரி இணைப்பு திட்டம், குண்டாறு இணைப்பு திட்டம், கருமேனி நதிநீர் இணைப்பு திட்டம் காவிரி ஆற்றை சீரமைப்பது குறித்தும், தமிழகத்தில் நீர் மேலாண்மையில் எடுக்கப்பட்டுள்ள பல்வேறு திட்டங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.