8வது கட்ட ஊரடங்கு நாளையுடன் நிறைவு : ஆட்சியர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை..!

29 September 2020, 11:01 am
CM Speech- Updatenews360
Quick Share

சென்னை : 8வது கட்ட ஊரடங்கு நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நோய் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் 8வது கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. பாதிப்புகளை பொறுத்து ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அந்தந்த மாநில அரசுகள் அறிவித்து வருகின்றன. அந்த வகையில், தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், 8வது கட்ட ஊரடங்கு நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனையின் போது, மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு நிலவரம் பற்றியும், நோய் தொற்றை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்து வருகிறார். மேலும், அடுத்த கட்ட ஊரடங்கில் அளிக்கப்படும் தளர்வுகள் பற்றியும் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இதைத் தொடர்ந்து, மருத்துவ நிபுணர்களுடனும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனையின் போது, ஊரடங்கை தளர்த்துவதா..? அல்லது நீட்டிப்பதா..? என்பது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படுகிறது.

இதனிடையே, ஆட்சியர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி நடத்தி வரும் ஆலோசனைக் கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கவில்லை. அவர் சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள தனது இல்லத்தில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.