‘வாழ்வில் இன்றைய நாள் மகிழ்ச்சிகரமான நாள்’ : அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பிற்கான ஆணையை வழங்கிய முதலமைச்சர் நெகிழ்ச்சி..!!

18 November 2020, 2:24 pm
gvt students- updatenews360
Quick Share

சென்னை : அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பிற்கான ஆணையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

மருத்துவப் படிப்பிற்கான கலந்தாய்வு சென்னை நேரு விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் மூலம் மருத்துவம் படிப்பதற்கான வாய்ப்பை பெற்ற முதல் 18 மாணவர்களுக்கு, சேர்க்கைக்கான ஆணையை வழங்கினார்.

அப்போது, நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது :- என்னுடைய வாழ்வில் இன்றைய நாள் மகிழ்ச்சிகரமான நாள்.
தமிழக வரலாற்றிலும் இந்த நாள் ஒரு பொன்னாள். அரசுப்பள்ளியில் படித்தவன் என்கிற முறையில் எனக்கு மனநிறைவை ஏற்படுத்திய நாள். கொள்கை அளவில் நீட் தேர்வுக்கான தமிழக அரசின் எதிர்ப்பு தொடரும். நீட் தேர்வை எதிர்கொள்வதற்கு அரசுப் பள்ளி மாணவர்களுக்கான வாய்ப்பு, வசதி குறைவாக இருந்தது.

12ம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் சுமார் 49 சதவீதம் பேர் அரசுப் பள்ளி மாணவர்கள். அவர்களுக்காகவே மருத்துவ படிப்பில் 7.5% இடஒதுக்கீடு வழங்க சட்டம் இயற்றப்பட்டுள்ளது. பல தடைகளை கடந்து இந்த சட்டம் தற்போது ஏழை, எளிய மாணவர்களின் கனவை நனவாக்கியுள்ளது. தமிழகத்தில் நான் முதலமைச்சராக பதவியேற்ற பிறகு 1990 எம்பிபிஎஸ் இடங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன.

கடந்த வருடம் வெறும் 6 பேர் மட்டுமே அரசுப் பள்ளிகளில் பயின்று எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்தனர். ஆனால், தற்போது எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்கள் 404 பேர் சேரும் நிலை உருவாகியுள்ளது, எனக் கூறினார்.

1 thought on “‘வாழ்வில் இன்றைய நாள் மகிழ்ச்சிகரமான நாள்’ : அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பிற்கான ஆணையை வழங்கிய முதலமைச்சர் நெகிழ்ச்சி..!!

Comments are closed.