பொருளாதார வளர்ச்சியை நோக்கி எடப்பாடியாரின் ஆட்சி : உட்கட்டமைப்பில் அதிகரிக்கும் முதலீடு.. வேலைவாய்ப்பு, வருமானத்தைப் பெருக்கத் திட்டம்!!

2 November 2020, 8:45 pm
Eps - updatenews360 (2)
Quick Share

சென்னை : தமிழ்நாட்டில் ஒரு கோடி பரிசோதனைக்கு மேல் நடத்தி கொரோனாத் தொற்றைப் பெருமளவு குறைத்த எடப்பாடி பழனிசாமி அரசு அடுத்த கட்டமாக உட்கட்டமைப்புத் திட்டங்களில் முதலீட்டை அதிகரித்து பொருளாதாரத்தை பெருமளவு வளர்ச்சி நிலைக்குக் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளது.

மாநிலத்தின் பொருளாதாரத்தை வேகமாக மீட்டெடுக்க அரசு செலவுகளை அதிகரிக்க வேண்டுமென்றும் வளர்ச்சித் திட்டங்களிலும் உட்கட்டமைப்புப் பணிகளிலும் நிதியை முதலீடு செய்யவேண்டும் என்றும், ரங்கராஜன் தலைமையிலான பொருளாதாரக் குழு அளித்த பரிந்துரை செய்துள்ளது. இதைத் தொடர்ந்து செலவுகளை ரூ, 14 ஆயிரம் கோடி அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளது.

கோவிட்-19 தொற்று அதிகரித்ததைத் தொடர்ந்து மார்ச் மாதம் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அரசு வருவாயும் பெருமளவு குறைந்தது. இதைத் தொடர்ந்து அரசு செலவினங்களும் மொத்த மாநில உற்பத்தியில் 0.7 சதவீதம் குறைக்கப்பட்டது. இது ஏறத்தாழ ரூ. 14 ஆயிரம் கோடியாகும். அரசு செலவைக்குறைக்கும் வகையில் அரசு ஊழியர்களின் ஓய்வு வயது ஒரு ஆண்டு அதிகரிக்கப்பட்டது. அவர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படியும் நிறுத்திவைக்கப்பட்டது.

தற்போது அரசின் தொடர் பரிசோதனைகளாலும் சிகிச்சை முறைகளாலும் கொரோனாத் தொற்று குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை ஒரு கோடியே 29 ஆயிரத்து 222 பரிசோதனைகள செய்யப்பட்டன. அதுவும், அனைத்து சோதனைகளும் ஆர்டி-பிசிஆர் பரிசோதனைக் கருவிகளைப் பயன்படுத்தி செய்யப்ட்டன. இந்தியாவிலேய பிசிஆர் கருவியைப் பயன்படுத்தி இத்தனை பரிசோதனைகளைச் செய்துள்ள மாநிலம் தமிழகமாகும். மற்ற சோதனைகளைவிட பிசிஆர் பரிசோதனை சிறப்பானதும் சரியான முடிவுகளைக் காட்டுவதுமாகும்.

trichy corona Test -Updatenews360

பெருமளவு பரிசோதனை நடவடிக்கைகளாலும் சிகிச்சை முறைகளாலும் நாளொன்றுக்கு 6000 முதல் 7,000 வரை இருந்த புதிய தொற்றுகள் தற்போது நாளொன்றுக்கு 2,500 என்கிற அளவுக்குக் குறைந்துள்ளது. தற்போது சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 20,994-ஆக குறைந்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, கோவை, சேலம் ஆகிய நான்கு மாவட்டங்களைத் தவிர அனைத்து மாவட்டங்களிலும் சிகிச்சைபெறுபவர்களின் எண்ணிக்கை ஆயிரத்துக்கும் குறைவாக இருக்கிறது.

இந்த நிலையில் அடுத்த கட்டமாக பொருளாதார மீட்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு இறங்கியுள்ளது. சென்னையில் மின்சார இரயில் போக்குவரத்து தவிர அனைத்துப் போக்குவரத்தும் தொடங்கப்பட்டுள்ளது. மாநில முழுவதும் பேருந்துப் போக்குவரத்தும் தொடங்கப்பட்டுவிட்டது. அனைத்து அலுவலகங்களும் வணிக நிறுவனங்களும் கடைகளும் திறக்கப்பட்டுவிட்டன. மேலும், பொருளாதாரத்தை வளர்க்க வளர்ச்சித் திட்டங்களிலும் உட்கட்டமைப்புத் திட்டங்களிலும் செலவை அதிகரிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

TN Secretariat - Updatenews360

மக்களின் கைகளில் பணம் சேர்வதால் விற்பனை அதிகரித்து தேவைகள் அதிகமானால் உற்பத்தித் துறையும் பெருமளவு வளர்ச்சி அடையும் என்பதால் அரசு செலவுக்குறைப்பு நடவடிக்கைகளை முற்றிலும் விலக்கிக்கொள்ளும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது மட்டுமின்றி நீர்ப்பாசனத்திட்டங்களிலும் சாலை அமைப்பதிலும் பாலம் கட்டுவதிலும் இதர உட்கட்டமைப்புகளிலும் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு அரசு நிதி ஒதுக்க முடிவு செய்துள்ளது. இதனால், உட்கட்டமைப்புத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு மக்கள் பயனடைவார்கள். மேலும், பலருக்கும் வேலைவாய்ப்பும் வருமானமும் பெருகுவதாலும் வாங்கும் சக்தியும் பொருள் தேவையும் அதிகரிக்கும். அதனால், உற்பத்தித்துறையும் பெரும் வளர்ச்சி அடையும் என்பதால் தமிழகம் கொரோனாத் தொற்றுக்குப்பின் பெரும் பொருளாதார வளர்ச்சியை நோக்கி மீண்டும் வேகமாக பயணம் செய்யத்தொடங்கிவிட்டது.

Views: - 28

0

0

1 thought on “பொருளாதார வளர்ச்சியை நோக்கி எடப்பாடியாரின் ஆட்சி : உட்கட்டமைப்பில் அதிகரிக்கும் முதலீடு.. வேலைவாய்ப்பு, வருமானத்தைப் பெருக்கத் திட்டம்!!

Comments are closed.