அன்று மாரீஸ்வரி.. இன்று சாதிக் பாஷா.. : மக்கள் நலனில் அதிரடி காட்டும் முதலமைச்சர் பழனிசாமி..!!

20 November 2020, 5:32 pm
cm help - updatenews360
Quick Share

நாமக்கல் அருகே வேலைவாய்ப்பு வழங்கக் கோரி மாற்றுத்திறனாளி இளைஞர் அளித்த மனு மீது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் உடனடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

கடந்த புதன்கிழமை சேலம் செல்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோவை வந்தார். பின்னர், அங்கிருந்து சாலை மார்க்கமாக சேலம் நோக்கி காரில் புறப்பட்டுச் சென்றார். நாமக்கல் மாவட்ட எல்லையான குமாரபாளையத்தில் முதலமைச்சருக்கு பூங்கொடுத்து அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா ஆகியோர் வரவேற்பு அளித்தனர்.

அப்போது, இளம்பிள்ளைவாத நோயால் பாதிக்கப்பட்ட குமாரபாளையத்தைச் சேர்ந்த சாதிக் பாஷா என்னும் மாற்றுத்திறனாளி இளைஞர், வேலைவாய்ப்பு வழங்கக் கோரி முதலமைச்சரிடம் மனு ஒன்றை அளித்தார்.

cm help 1 - updatenews360

இந்த மனுவை பெற்றுக் கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர் மெகராஜுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில், சாதிக் பாஷாவிற்கு, குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் கணினி பிரிவில் பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த நிலையில், குமாரபாளையத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவின் பேரில், மாற்றுத்திறனாளி ,ளைஞர் சாதிக் பாஷாவுக்கு பணி நியமன ஆணையை அமைச்சர் தங்கமணி வழங்கினார்.

ஏற்கனவே, கடந்த மாதம் கன்னியாகுமரி அருகே நடைபெற்ற நிகழ்ச்சியின் போது, முதலமைச்சர் பழனிசாமியின் காரை நிறுத்தி மனு அளித்த மாரீஸ்வரி என்னும் மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு, உடனடியாக பணி ஆணை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Views: - 0

0

0