வாய்ப்பே கொடுக்காமல் அடித்து ஆடும் எடப்பாடியார்…!!! அடுத்தடுத்த அதிரடியால் திக்குமுக்காடிய திமுக!!!

28 January 2021, 6:25 pm
edappadi palanisamy - updatenews360
Quick Share

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாஜகவின் தேர்தல் வியூகம், சசிகலாவின் வருகை உள்ளிட்ட காரணங்களால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எப்படியும் சிக்கலில் சிக்குவார் என திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கழுகு பார்வையை போட்டு பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

மேலும், சசிகலா வருகையால் கட்சிக்குள் பிளவு ஏற்படும், உட்கட்சி பூசல் வெடிக்கும்… பிறகு, தங்களின் தேர்தல் காய்களை அதிதீவிரமாக நகர்த்திக் கொள்ளலாம் என ஸ்டாலினும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். மீண்டும் சசிகலாவிற்கு இடமில்லை என அதிமுகவினர் திட்டவட்டமாக கூறி வந்தாலும், எப்படியாவது அவரை கட்சியில் இணைத்து திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று பாஜகவும் பல்வேறு வழிகளை தேடி வருகிறது.

sasikala - updatenews360

இதை எதனையும் காதில் போட்டுக் கொள்ளலாம், தனது பொறுப்பினையும், மக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சரிவரச் செய்திருப்பது அதிமுகவினரிடையே புது நம்பிக்கையை அதிகரிக்கச் செய்துள்ளது.

eps - updatenews360

கட்சிக்குள் சசிகலாவிற்கு ஆதரவாக குரல் கொடுப்பரை கட்டம் கட்டும் வேளையை எடப்பாடியார் ஒருபுறம் செய்து வந்தாலும், ஜெயலலிதாவுக்கான நினைவு மண்டபத்தை சொன்னபடி திறந்து வைத்து அசத்தினார். ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வந்து நினைவு மண்டபத்தை பார்த்துச் சென்றுக் கொண்டிருக்கும் வேளையில், நீதிமன்ற தடைகளை தாண்டி, வேதா இல்லத்தை, நினைவில்லமாக மாற்றி, ரத்தத்தின் ரத்தங்களுக்கு காணிக்கையாக்கினார்.

அதுமட்டுமல்லாமல், எல்லாவற்றிற்கும் மேலாக, எத்தனை ஆண்டுகள் கழிந்தாலும், பெயர் சொல்லும் அளவிலான காரியத்தையும், அமைதியாக முடித்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்.,24ம் தேதியை அரசு விழாவாக அறிவித்து அதிமுக தொண்டர்களை மகிழ்ச்சிக்கடலில் மூழ்கடித்தார். இதன்மூலம், ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு, அதிமுகவிற்கு சரியான தலைவரை கண்டுவிட்டோம் என தொண்டர்கள் மனதார சொல்லும் அளவிற்கு, அதிரடி நடவடிக்கைகளினால் ஒரே வாரத்தில் தனக்கான ஆதரவு அலைகளை வீசச் செய்துவிட்டார் என்றே சொல்லலாம்.

CM - Updatenews360

உட்கட்சி பூசல்கள், திமுகவிற்கு இணையான தேர்தல் வியூகம் வகுக்க வேண்டிய கட்டாயம் என பல்வேறு பணிகளுக்கு நடுவே, யாரையும் நம்பாமல், அதிமுக தொண்டர்களையும், மக்களையும் முன்னிலைப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் ஒவ்வொரு நடவடிக்கைகளும், தேர்தலில் அவர் எதிர்பார்க்கும் முடிவை வழங்கும் எனக் கூறுகின்றனர் அதிமுகவைச் சேர்ந்தவர்கள்.

Views: - 0

0

0