அலங்காநல்லூரில் அடங்க மறுக்கும் காளைகள்.. ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்த இபிஎஸ், ஓபிஎஸ்..!!

16 January 2021, 9:07 am
Cm jallikattu - updatenews360
Quick Share

உலக பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

அவனியாபுரம், பாலமேடு உள்ளிட்டவற்றை தொடர்ந்து, பொங்கல் பண்டிகையின் 3வது நாளான இன்று உலக பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நடந்து வருகிறது. இதற்காக தயார் செய்யப்பட்ட கோட்டை முனியசாமி வாடிவாசலில் ஜல்லிக்கட்டு போட்டியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். முன்னதாக, கோவில் காளைக்கு இருவரும் மரியாதை செலுத்தினர்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில்களமிறங்க 764 வீரர்கள், 850 காளைகளின் உரிமையாளர்கள் அனுமதி டோக்கன் பெற்றுள்ளனர். வெற்றி பெறும் காளை மற்றும் காளையர்களுக்கு கார், தங்கக்காசு, கட்டில், சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்படுகின்றன. சிறந்த காளையர்கள் மற்றும் காளைகளுக்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர் சார்பில் பரிசுகளும் வழங்கப்பட இருக்கிறது.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் எந்தவித அசம்பாவீதமும் நிகழக் கூடாது என்பதற்காக, ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.