3,501 அம்மா நகரும் ரேஷன் கடைகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி..!

21 September 2020, 10:49 am
mobile ration - updatenews360
Quick Share

தமிழகத்தில் 3,501 அம்மா நகரும் ரேஷன் கடைகளின் சேவையை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.

தமிழகம் முழுவதும் 3,501 நகரும் அம்மா ரேசன் கடைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் 21ம் தேதி தொடங்கி வைக்கிறார்.

கடந்த மார்ச் மாதம் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மக்களின் குடியிருப்புகளுக்கு அருகாமையிலேயே அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்கும் விதமாக, ரூ.9.66 கோடி மதிப்பில் 3,501 நகரும் நியாய விலைக்கடைகள் துவக்கப்படும், எனத் தெரிவித்திருந்தார்.

இந்தத் திட்டத்தின் மூலம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் சரியான எடையில் தரமான உணவுப் பொருட்கள் வழங்க வழிவகை செய்ய வேண்டும் என்பதே இந்த நோக்கம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், வாகனங்களின் மூலம் குடியிருப்பு பகுதிகளுக்கே சென்று குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்கும் விதமாக, தலைமைச் செயலகத்தில் 3,501 நகரும் அம்மா ரேசன் கடைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.

இதைத் தொடர்ந்து, திருச்சியில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டத்தையும், சூரிய சக்தியில் இயங்கும் 13 ஆட்டோ சேவைகளையும் அவர் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செல்லூர் ராஜு, காமராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

Views: - 1

0

0