தொல்லியல் பட்டயப்படிப்புக்கான அறிவிக்கையில் தமிழை இணைக்க நடவடிக்கை தேவை: பிரதமருக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம்..!

By: Babu
8 October 2020, 8:34 pm
Quick Share

தொல்லியல் பட்டயப்படிப்புக்கான அறிவிக்கையில் தமிழ்மொழியையும் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமருக்கு முதலமைச்சர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

மத்திய அரசின் தொல்லியல் பட்டயப்படிப்புக்கான அறிவிக்கையில், தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டிருப்பதற்கு தமிழக அரசியல் தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். பாரம்பரியமிக்க தமிழ் மொழியை தொல்லியல் பட்டயப் படிப்புக்கான அறிவிக்கையில் இடம்பெறச் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், தொல்லியல் பட்டயப்படிப்புக்கான அறிவிக்கையில் தமிழ்மொழியையும் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் முதுகலை பட்டய படிப்புக்கான குறைந்தபட்ச தகுதியில் தமிழையும் இணைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Views: - 44

0

0