மத்திய தொன்மை ஆராய்ச்சி குழுவில் தமிழர்களை சேர்க்க வேண்டும் : பிரதமருக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம்..!

23 September 2020, 1:13 pm
CM Speech- Updatenews360
Quick Share

சென்னை : இந்தியாவின் தொன்மையை ஆராய்ச்சி செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுவில் தமிழர்களையும் சேர்க்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

நமது நாட்டின் தொன்மையான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களை ஆராய்வதற்காக 16 பேர் கொண்ட குழுவை மத்திய அரசு அண்மையில் அமைத்துள்ளது. இந்தக் குழுவில் தமிழர்கள் யாரும் இடம்பெறாதது அதிர்ச்சியையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது. உலகில் தொன்மை மிக்க மொழியாக கருதப்படும் தமிழை தாய்மொழியாக கொண்ட தமிழர்களை இந்தக் குழுவில் சேர்க்காத மத்திய அரசின் நடவடிக்கை கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

இந்த நிலையில், இந்தியாவின் தொன்மையை ஆராய்ச்சி செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுவில் தமிழர்களையும் சேர்க்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், “இந்தியாவின் தொன்மையை ஆராய அமைக்கப்பட்டுள்ள குழுவில் தமிழக நிபுணர்களை இடம்பெறச் செய்யாதது வியப்பளிக்கிறது. கடந்த ஆண்டு மகாபலிபுரம் வந்த போது, தமிழகத்தின் வரலாற்று சிறப்புகளை நீங்கள் அறிந்திருப்பீர்கள். தமிழ் கலாச்சாரமும், தமிழ் மொழியும் இல்லாவிடில், இந்தியாவின் வரலாறு முழுமையடையாது. எனவே,
மத்திய அரசின் கலாசார ஆய்வுக்குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த நிபுணர்களும் இடம்பெற வேண்டும், எனக் குறிப்பிட்டுள்ளார்.