ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறதா..? 29ம் தேதி நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை..!

25 August 2020, 5:08 pm
Cm edappadi - Updatenews360
Quick Share

சென்னை : 7வது கட்ட ஊரடங்கு 31ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் 29ம் தேதி ஆலோசனை நடத்துகிறார்.

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, அதிகம் பாதித்த மாநிலங்களில் தமிழகம் 2வது இடத்தில் உள்ளது. இதுவரையில் 3 லட்சத்து 85 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 6,500க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் 7வது கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. பாதிப்புகளை பொறுத்து ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அந்தந்த மாநில அரசுகள் அறிவித்து வருகின்றன. அந்த வகையில், தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், 7வது கட்ட ஊரடங்கு வரும் 31ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் 29ம் தேதி ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனையின் போது, ஊரடங்கை தளர்த்துவதா..? அல்லது நீட்டிப்பதா..? என்பது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படுகிறது.

அதேபோல, அன்றைய தினம் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார். அப்போது, மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு நிலவரம் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிய உள்ளார். மேலும், இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்வது குறித்தும் முடிவெடுக்கப்படுகிறது.

இதைத் தொடர்ந்து, வரும் 30ம் தேதி மருத்துவ நிபுணர்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்திக்க இருக்கிறார். இந்த சந்திப்பின் போது கொரோனா வைரஸின் தாக்கம் பற்றிய முழு விபரத்தை அவர் கேட்டறிவார். மேலும், இந்த நோய் தொற்று தாக்கத்தின் கட்டுப்படுத்த ஊரடங்கை நீட்டிக்கலாமா..? அல்லது வேண்டாமா..? என்பது குறித்து ஆலோசனை நடத்த உள்ளார்.

Views: - 38

0

0