பாசனத்திற்காக பெரியாறு அணையில் இருந்து 7ம் தேதி முதல் தண்ணீர் திறந்து விட உத்தரவு!!

Author: Babu
3 October 2020, 1:16 pm
mullai periyar dam - updatenews360 (2)
Quick Share

தேனி : பெரியாறு அணையில் இருந்து பாசனத்திற்காக வரும் 7ம் தேதி முதல் தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :- தேனி மாவட்டம்‌, பெரியாறு அணையிலிருந்து 18ம்‌ கால்வாயில்‌ (பழனிவேல்‌ ராஜன்‌ கால்வாய்‌) தண்னீர்‌ திறந்துவிடுமாறு வேளாண்‌ பெருங்குடி மக்களிடமிருந்து கோரிக்கைகள்‌ வந்துள்ளன. வேளாண்‌ பெருங்குடி மக்களின்‌ கோரிக்கையினை ஏற்று, தேனி மாவட்டம்‌, 18ம்‌ கால்வாயின்‌ (பழனிவேல்‌ ராஜன்‌ கால்வாய்‌) கீழ்‌ உள்ள 4614.25 ஏக்கர்‌ ஒருபோக பாசன நிலங்களுக்கு பெரியாறு அணையிலிருந்து 7.10.2020 முதல்‌ 30 நாட்களுக்கு, விநாடிக்கு 98 கனஅடி வீதம்‌, மொத்தம்‌ 255 மி.கன அடி தண்ணீர்‌ திறந்துவிட நான்‌ ஆணையிட்டுள்ளேன்‌.

இதனால்‌, தேனி மாவட்டம்‌, 18ம்‌ கால்வாயின்‌ (பழனிவேல்‌ ராஜன்‌ கால்வாய்‌) கீழ்‌ உள்ள 4614.25 ஏக்கர்‌ நிலங்கள்‌ பாசன வசதி பெறும்‌ என்பதை மகிழ்ச்சியுடன்‌ தெரிவித்துக்கொள்கிறேன்‌. மேலும்‌, விவசாயப்‌ பெருமக்கள்‌ நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர்‌ மேலாண்மை மேற்கொண்டு உயர்‌ மகசூல்‌ பெற வேண்டுமாய்‌ அன்புடன்‌ கேட்டுக்‌ கொள்கிறேன்‌, எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 37

0

0