‘விரைந்து குணமடைய பிரார்த்திக்கிறேன்’ : பிரணாப் முகர்ஜி உடல்நிலை குறித்து முதலமைச்சர் டுவிட்..!

11 August 2020, 4:35 pm
Edappadi palanisamy - updatenews360
Quick Share

சென்னை : கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி விரைந்து குணமடைய வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவியுள்ள நிலையில், அமைச்சர்கள் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில், குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டது. மூளையில் ஏற்பட்டுள்ள கட்டியை அகற்றும் அறுவைச் சிகிச்சைக்காக, டெல்லியில் உள்ள ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, நோய் தொற்று கண்டறியப்பட்டது.

இந்த தகவலை அவரே டுவிட்டர் மூலம் கூறிய போது, தன்னை நேரில் சந்தித்தவர்கள் தங்களை தனிமைபடுத்திக்கொள்ளுமாறும் பிரணாப் முகர்ஜி கேட்டுக்கொண்டார். இதையடுத்து, தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது.

pranab_mukherjee_updatenews360

இதனிடையே, அறுவை சிகிச்சை முடித்த கையோடு, கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அவர் பூரண உடல்நலத்துடன் திரும்ப வேண்டும் என அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் வேண்டி வருகின்றனர்.

இந்த நிலையில், “இந்தியாவின் குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி விரைந்து குணமடைய கடவுளிடம் வேண்டி பிராத்தனை செய்கிறேன்,” என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Views: - 1

0

0