ரூ. 600 கோடி மதிப்பிலான சாயி பல்கலை.,க்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி..!

31 August 2020, 5:46 pm
sai_univer - updatenews360
Quick Share

செங்கல்பட்டு : ரூ. 600 கோடி மதிப்பில் அமைக்கப்படவுள்ள சாயி பல்கலைக்கழகத்தின் பிரதான வளாக கட்டிடத்திற்கு காணொளி காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் போது, தமிழக அரசு – சாயி கல்வி, மருத்துவம், ஆராய்ச்சி மற்றும் அறக்கட்டளை இடையே, சாயி பல்கலைக்கழகம் நிறுவுவது தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. சாயி பல்கலை., நிர்வாகக் குழுவில் உச்சநீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி, கல்வி மற்றும் மற்ற துறைகளின் நிபுணர்கள் இடம்பெற்றுள்ளனர்.

ஒப்பந்தத்தின்படி, சாயி பல்கலை.,க்கழகம் முதற்கட்டமாக 600 கோடி மதிப்பில், 12 லட்சம் சதுர அடி அமைக்கப்பட உள்ளது. இதில், ஆரம்பத்தில் 6000 மாணவர்களும், தலா 300 உறுப்பினர்களைக் கொண்ட பேராசிரியர்கள் குழு மற்றும் நிர்வாக பணியாளர்களைக் கொண்டு இயங்கும்.

இதைத் தொடர்ந்து, இதற்கு அடுத்த 5 ஆண்டுகளில் மொத்தம் 30 லட்சம் சதுர அடி பரப்பளவில் சாயி பல்கலை., விரிவாக்கம் செய்யப்பட்டு, 20 ஆயிரம் மாணவர்களுடன் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், முதற்கட்ட கல்லூரி பணிகளுக்கான அடிக்கல்லை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கே.பி. அன்பழகன், பென்ஜமின், முதன்மை தலைமைச் செயலர் சண்முகம், சாயி பல்கலைக்கழகத்தின் நிறுவனர் மற்றும் வேந்தர் கே.வி. ரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Views: - 0

0

0