ஓபிஎஸை இன்று மாலை வீட்டிற்கு சென்று சந்திக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி..?

7 October 2020, 2:23 pm
ADMK - updatenews360
Quick Share

சென்னை : அதிமுக தேர்தல் வேட்பாளர் அறிவிக்கப்பட்ட நிலையில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவரது வீட்டிற்கு இன்று மாலை நேரில் சென்று சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில நாட்களாக நிலவி வந்த அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற குழப்பத்திற்கு இன்று அக்கட்சியின் மேல்மட்ட நிர்வாகிகள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். அடுத்த ஆண்டு நடக்கும் சட்டப்பேரவை தேர்தலில், எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தி அதிமுக தேர்தல் சந்திக்க இருப்பதாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.

வெற்றி வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை, அதிமுக வேட்பாளராக அறிவிப்பதில் மகிழ்ச்சியடைவதாகவும் பன்னீர்செல்வம் கூறியிருந்தார்.

இந்த நிலையில், இன்று மாலை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை அவரது வீட்டிற்கு நேரில் சென்று சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பின் போது, முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்ததற்கு நன்றி கூறுவார் என தெரிகிறது.

Views: - 36

0

0