பெண்களுக்கும் சொத்தில் சம உரிமை…! சமூக நீதியை காப்பாற்றும் தீர்ப்பு : முதலமைச்சர் வரவேற்பு..!

11 August 2020, 5:34 pm
EPS- updatenews360
Quick Share

சென்னை : சொத்தில் பெண்களுக்கு சம உரிமை உண்டு என உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பிற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரவேற்பு தெரிவித்துள்ளார்.

கடந்த 2005-ஆம் ஆண்டு இந்து வாரிசு சட்டம் தொடர்பான வழக்கு, இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகள் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சொத்து பங்கீட்டில் பெண்களுக்கு ஏன் உரிமை இல்லை என கேள்வி எழுப்பிய நீதிபதி, பெற்றோரின் சொத்தை பிரித்து பங்கு வழங்கும்போது, ஆண் பிள்ளைகளை போலவே பெண்களுக்கும் சம பங்கு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், சொத்தில் பெண்களுக்கு சம உரிமை உண்டு என உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பிற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில், “சொத்து உரிமையில் ஆண் வாரிசுகளுக்கு நிகரான சம உரிமை பெண்களுக்கும் உண்டு என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது. சமூக நீதியை காப்பாற்றும் விதமாக வந்திருக்கும் இந்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது,” எனத் தெரிவித்துள்ளார்.

Views: - 10

0

0