4வது முறையாக முதலமைச்சராக பதவியேற்கும் நிதிஷ்குமாருக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து..!!

16 November 2020, 3:54 pm
Quick Share

பீகார் சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்ற நிலையில், 4வது முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்க இருக்கும் நிதிஷ்குமாருக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்தார்.

அண்மையில் நடந்த பீகார் சட்டப்பேரவை தேர்தல் வாக்குகள் கடந்த 10ம் தேதி எண்ணப்பட்டது. பெரும்பான்மைக்கு 122 இடங்கள் தேவைப்பட்ட நிலையில், பாஜக தலைமையிலான கூட்டணி கட்சி 125 இடங்களை வென்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. பாஜக 74 தொகுதிகளையும், ஐக்கிய ஜனதா தளம் 43 தொகுதிகளையும் கைப்பற்றின.

இதைத் தொடர்ந்து, நடந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில், பீகார் முதல்வராக நிதிஷ்குமார் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். துணை முதலமைச்சராக சுஷில் குமார் மோடியும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, பீகார் மாநிலத்தில் 4வது முறையாக முதலமைச்சராக நிதிஷ்குமார் இன்று மாலை 4.30 மணிக்கு பதவியேற்க இருக்கிறார்.

இந்த நிலையில், பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாருக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்தார். அவர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில், “பீகார் முதலமைச்சராக பொறுபேற்கவிருக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள். 4வது முறையாக சாதனை படைத்த உங்களுக்கு ஒரு வெற்றிகரமான பதவிக்காலம் அமைய விரும்புகிறேன்,” என பதிவிட்டுள்ளார்.

Views: - 27

0

0