ஆளுநர் vs முதலமைச்சர் உச்சகட்ட மோதல் : குடியரசு தினவிழாவை புறக்கணித்த முதலமைச்சர் : எதிர்கட்சிகள் கடும் கண்டனம்

Author: Babu Lakshmanan
26 January 2023, 12:43 pm
flag--unpdatenews360
Quick Share

74வது குடியரசு தினத்தையொட்டி தெலுங்கானா மாநில ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற குடியரசு தினவிழாவை அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் புறக்கணித்தது கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.

நாட்டின் 74வது குடியரசு தினம் நாடு முழுவதும் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி அந்தந்த மாநிலங்களில் ஆளுநர்கள் கொடியேற்றி மரியாதை செலுத்தினர். தலைநகர் டெல்லியில் நடைபெறும் விழாவில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

சென்னை மெரினாவில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார். மேலும், முப்படைகளின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

இந்த நிலையில், தெலுங்கானாவில் ஆளுநர் மாளிகையில் நடந்த குடியரசு தின விழாவை, அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் புறக்கணித்தார்.

ஐதராபாத்தில் உள்ள ஆளுநர் மாளிகையில் குடியரசு தின விழா கொண்டாட்டத்தையொட்டி அம்மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

ஆனால், ஆளுநருடனான உச்சகட்ட மோதலால், இந்த விழாவில் பங்கேற்காமல், முதலமைச்சர் சந்திசேகர ராவ் புறக்கணித்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

Views: - 315

0

0