கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி : முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

Author: Babu Lakshmanan
13 September 2021, 11:44 am
gold loan - updatenews360
Quick Share

கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரையிலான நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவை தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதிகளில், கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை நகைக் கடன் பெற்றோரிடன் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்திருந்தது. இந்த வாக்குறுதிகளை ஆட்சிக்கு வந்து 100 நாட்களுக்கு மேலாகியும் நிறைவேற்றாததது ஏழை, எளிய மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி வந்தது.

அதேவேளையில், கூட்டுறவு நகைக்கடன் பெற்றதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், அதை களைந்த பிறகே, தள்ளுபடி தொடர்பான அறிவிப்பை வெளியிடுவோம் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரையிலான நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அப்போது, அவர் பேசியதாவது :- உண்மையான ஏழை, எளிய மக்கள் பயனடையும் விதமாக கூட்டுறவு வங்களில் பெற்ற நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும். கடந்த ஒரு மாதமாக கூட்டுறவு வங்கிக் கடன் பற்றிய தரவுகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அதில், கடன் பெற்றவர்கள் குறித்து 51 விதமான தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன.

கூட்டுறவு வங்கிகளில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மற்றும் சங்கத்தின் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். நகைக்கடன் தள்ளுபடியால் அரசுக்கு ரூ.6,000 கோடி செலவாகும், என்றார்.

Views: - 319

0

0