முதலமைச்சர் ஸ்டாலினின் சுயசரிதையான ‘உங்களின் ஒருவன்’… இன்று வெளியிடுகிறார் ராகுல் காந்தி..!!

Author: Babu Lakshmanan
28 February 2022, 8:34 am
ungalil oruvan - updatenews360
Quick Share

சென்னை : முதலமைச்சர் ஸ்டாலினின் சுயசரிதை நூலான ‘உங்களின் ஒருவன்’ நூலை காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி இன்று வெளியிடுகிறார்.

தனது அரசியல் வாழ்க்கை பற்றிய விபரங்கள் அடங்கிய உங்களில் ஒருவன்’ எனும் சுயசரிதை நூல், இந்த மாத இறுதியில் வெளியிடப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையகூட்டரங்கில் நடக்கும் விழாவில் சுய சரிதை நூலின் முதலாவது பாகம் இன்று வெளியிடப்படுகிறது.

நீர்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையிலும், திமுக எம்பி டி.ஆர்.பாலு முன்னிலையிலும் நடக்கும் இந்த விழாவில், காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி, நூலை வெளியிடுகிறார். இந்த விழாவில் கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

Views: - 559

0

0