மீண்டும் ஹாயாக சைக்கிள் பயணம்… சைக்கிளில் மாமல்லபுரம் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின்…!!

Author: Babu Lakshmanan
29 January 2022, 2:10 pm

சென்னை : சென்னையில் இருந்து கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக முதலமைச்சர் ஸ்டாலின் சைக்கிள் பயணம் மேற்கொண்டார்.

முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கடி சைக்கிள் பயணம் மேற்கொள்வது வழக்கம். அவர் செல்லும் போது, பாதுகாப்பிற்காக காவலர்களும் சைக்கிளிலும், பைக்கிலும் செல்வார்கள். இதனை எதிர்கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

முதலமைச்சர் சைக்கிள் பயணம் செல்வதால், போலீசாருக்கு வீண் அலைச்சல் என்று எதிர்கட்சிகள் கடும் விமர்சனம் செய்தன. இருப்பினும், அவர் தனது வழக்கத்தை மாற்றிக் கொள்வதில்லை.

இந்த நிலையில், இன்று உத்தண்டி சுங்கச்சாவடியில் இருந்து மாமல்லபுரம் வரை சைக்கிளில் சென்றார். அவருடன் நண்பர்கள் மற்றும் போலீசாரும் சென்றனர்.

  • Amala Paul viral video 2024 நடுக்கடலில் அமலாபால்..சர்ப்ரைஸ் கொடுத்த கணவர்…வைரலாகும் வீடியோ..!
  • Views: - 2871

    0

    0