தமிழகத்தில் ஊரடங்கு மேலும் நீட்டிப்பா..? பேருந்துகள் இயக்கப்படுமா..? முதலமைச்சர் நாளை ஆலோசனை

18 June 2021, 12:03 pm
cm stalin- updatenews360
Quick Share

சென்னை : கொரோனா ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பாக மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதலமைச்சர் ஸ்டாலின் நாளைஆலோசனை நடத்துகிறார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் நாளொன்று சுமார் 10 ஆயிரத்திற்கும் கீழான பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. இதனிடையே, கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு 21ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பது குறித்து மருத்துவ வல்லுநர்கள் குழுவுடன் முதலமைச்சர் ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்துகிறார். காணொளி காட்சி மூலம் நடக்கும் இந்த ஆலோசனைக் கூட்டம் காலை 10 மணிக்கு நடக்கிறது.

பொதுப் போக்குவரத்து இன்னும் தொடங்கப்படாத நிலையில், அதனை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றனவா..? என்பது குறித்தும் அவர் கேட்டறிய உள்ளார்.

Views: - 156

1

0