மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் நாளை ஆலோசனை : பொதுப் போக்குவரத்தை இயக்குவது குறித்து முக்கிய முடிவு..!!

14 June 2021, 7:17 pm
Quick Share

சென்னை : கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளை தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்திகிறார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் நாளொன்று சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. இதனிடையே, கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு 21ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்துகிறார். காணொளி காட்சி மூலம் நடக்கும் இந்த ஆலோசனைக் கூட்டம் நாளை காலை 10 மணிக்கு நடக்கிறது.

பொதுப் போக்குவரத்து இன்னும் தொடங்கப்படாத நிலையில், அதனை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றனவா..? என்பது குறித்தும் மாவட்ட ஆட்சியர்களிடம் அவர் கேட்டறிய உள்ளார்.

Views: - 186

0

0