ஒன்றிய அரசு என்பது தவறானதல்ல… இனி அப்படியே அழைப்போம்… பாஜக எம்எல்ஏவின் கேள்விக்கு முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம்..!!

23 June 2021, 12:58 pm
stalin - nainar nagendhiran - updatenews360
Quick Share

சென்னை : ஒன்றிய அரசு என்ற சொல் தவறானதல்ல என்றும், இனி அதனையே தமிழக அரசு பயன்படுத்துவோம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

16வது தமிழக சட்டப்nபரவை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்த திமுக தலைமையிலான அரசு, மத்திய அரசை ஒன்றிய அரசு ஒன்றே அழைத்து வருகிறது. இது கடும் விமர்சனத்திற்குள் ஆளாகியது. இதற்கு முன்பு அறிஞர் அண்ணா, கருணாநிதி ஆட்சி காலங்களில் இதுபோன்ற சொல்லை பயன்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது.

இந்த நிலையில், சட்டப்பேரவையின் இன்றைய கூட்டத் தொடரில் ஒன்றிய அரசு என்ற சொல்லுக்கு பொருள் என்ன என்று பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த முதலமைச்சர் ஸ்டாலின், “கூட்டாட்சி தத்துவ அடிப்படையில் ஒன்றிய அரசு என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. அரசியலமைப்பு சட்டத்தில் என்ன கூறப்பட்டுள்ளதோ, அதன்படியே இந்த சொல் பயன்படுத்தப்படுகிறது. மேலும், ஒன்றிய அரசு எனக் கூறுவதை குற்றமாக பார்க்க வேண்டாம். ஒன்றிய அரசு என்ற சொல்லையே தமிழக அரசு தொடர்ந்து பயன்படுத்தும்,” எனக் கூறினார்.

Views: - 165

0

0