கல்லணையில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு : தூர்வாரும் பணிகளையும் பார்வையிட்டார்..!!

11 June 2021, 11:16 am
stalin kallanai- updatenews360
Quick Share

தஞ்சை ; தஞ்சையில் உள்ள கல்லணையில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.

தஞ்சை மாவட்டத்தின் கடைமடை பகுதிவரை சாகுபடிக்காக தண்ணீர் சென்றடையும் வகையில், தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டு, அதற்காக டெல்டா மாவட்டங்களுக்கு 65 கோடி ருபாய் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கல்லணையில் உலக வங்கி நிதி உதவியுடன் நடைபெற்ற வரும் பணிகளையும் மற்றும் தூர்வாரும் பணிகளையும் பார்வையிட்ட முதல்வர் பின்னர் பொதுப்பணி துறை மற்றும் வேளாண்துறை அலுவலர்களுடன் கல்லணையில் ஆலோசனை நடத்தினார்.

டெல்டா மாவட்டங்களில் 4061 கி.மீ நீளத்திற்கு தூர்வாரும் பணிகள், கரைகள் சீரமைப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக சென்னையிலிருந்து இன்று காலை விமானம் மூலம் திருச்சிக்கு வந்த முதல்வர் தஞ்சை மாவட்டம் கல்லணையில் ஆய்வு மேற்கொண்டார்.

மேட்டூர் அணையிலிருந்து 12ஆம் தேதி தமிழக முதலமைச்சரால் திறந்துவிடப்படும் தண்ணீர் 16ஆம் தேதி தஞ்சை மாவட்டம் கல்லணையை வந்தடையும் என எதிர்பார்க்கபடுவதுடன் அன்றைய தினமே கல்லணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்படலாம் எனவும் எதிர்பார்க்கபடும் நிலையில், தூர்வாரும் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது.

Views: - 133

0

0

Leave a Reply