அனைவருக்கும் தடுப்பூசி என்பதே இலக்கு… வாராந்தோறும் 50 லட்சம் தடுப்பூசிகளை அனுப்புங்க : பிரதமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை

Author: Babu Lakshmanan
20 September 2021, 2:19 pm
Quick Share

சென்னை : வாரந்தோறும் 50 லட்சம் தடுப்பூசிகளை தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேவேளையில், அனைவருக்கும் தடுப்பூசி போட்டாக வேண்டும் என்ற முனைப்பில் மெகா தடுப்பூசி முகாம்களை தமிழக அரசு நடத்தி வருகிறது.

இந்த நிலையில், வாரந்தோறும் 50 லட்சம் தடுப்பூசிகளை தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது :- தமிழ்நாட்டில்‌ கோவிட்‌ தடுப்பூசிகள்‌ அதிகளவில்‌ போடப்பட்டுவரும்‌ நிலையில்‌, அக்டோபர்‌ 31 ஆம்‌ தேதிக்கு முன்பாக தகுதியுள்ள அனைவருக்கும்‌ இத்தடுப்பூசிகளைப்‌ போடுவதற்காக வாரம்தோறும்‌ 50 இலட்சம்‌ தடுப்பூசிகள்‌ தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டும், எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 164

0

0