ரூ.210 கோடியிலான வேளச்சேரி, கோயம்பேடு மேம்பாலங்கள் திறப்பு : சென்னை மக்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறியது!!!

Author: Babu Lakshmanan
1 November 2021, 12:18 pm
Chennai bridge - updatenews360
Quick Share

போக்குவரத் நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக, சென்னை மாநகரில் ரூ.210 கோடி செலவில் கட்டப்பட்ட வேளச்சேரி, கோயம்பேடு மேம்பாலங்களை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

சென்னையில் காலை மற்றும் மாலை வேளைகளில் ஒரு கிலோ மீட்டர் தொலைவை கடக்க ஒரு மணிநேரம் செலவழிக்க வேண்டியுள்ளது. எனவே, போக்குவரத்து நெரிசலால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பொதுமக்களை மீட்க, ரூ.146 கோடி செலவில் மேடவாக்கம்- சோழிங்கநல்லூர் சாலை சந்திப்பில் மேம்பாலம்,ரூ.108 கோடி செலவில் வேளச்சேரி விஜயநகர் மேம்பாலம்,ரூ.93 கோடியில் கோயம்பேடு காளியம்மன் கோயில் மேம்பாலம் கட்ட கடந்த 2012ல் முடிவு செய்யப்பட்டது.

நிதி ஒதுக்கீடு, டெண்டர் பணிகளை முடிப்பதில் ஏற்பட்ட பிரச்சனைகளால் இந்தப் பாலங்களை கட்டுவதில் காலதாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில், கட்டுமானப் பணிகள் முடிந்த வேளச்சேரி மேம்பாலத்தில் இரண்டாம் அடுக்கினையும், கோயம்பேடு காளியம்மன் கோயில் மேம்பாலத்தையும் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இதேபோல, வேளச்சேரி இரண்டாம் அடுக்கு மேம்பாலத்தையும், கோயம்பேடு மேம்பாலத்தையும் இன்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் 2 மேம்பாலங்களிலும் 1 கிமீ தூரத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் காரில் பயணம் மேற்கொண்டார்.

சென்னையில் உள்ள முக்கிய சாலைகளின் மேம்பாலங்கள் திறக்கப்பட்டதால், பொதுமக்களின் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது.

Views: - 266

0

0