நீட் தேர்வு விலக்கு மசோதா தாக்கல் : பிளஸ் 2 மதிப்பெண்… மருத்துவக் கல்வித்தரம் பாதிக்காது – முதலமைச்சர் ஸ்டாலின்

Author: Babu Lakshmanan
13 September 2021, 11:23 am
CM stalin - updatenews360
Quick Share

நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக் கோரும் சட்ட மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

தமிழகத்தில் திமுக ஆட்சியமைந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் உள்பட முக்கிய தலைவர்கள் உறுதியளித்திருந்தனர். அதேபோல, தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சியமைந்த நிலையில், நேற்று நீட் தேர்வு நடந்து முடிந்து விட்டது. இது மாணவர்களிடையே ஏமாற்றத்தையே கொடுத்துள்ளது.

இதனிடையே, சட்டப்பேரவையின் கடைசி நாளான இன்று, நீட் தேர்வு விலக்குக்கான சட்ட மசோதாவை முதலமைச்சர் ஸ்டாலின் தாக்கல் செய்தார். அப்போது, அவர் பேசியதாவது : நீட் தேர்வை ஆரம்பம் முதலே திமுக எதிர்த்து வருகிறது. பிளஸ் 2 மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடந்தால், அவர்களின் கல்வித்தரம் பாதிக்காது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 % இடஒதுக்கீடு தொடரும் வகையில் மசோதா அமைக்கப்பட்டுள்ளது.

குடியரசு தலைவரின் ஒப்புதலை பெற தீர்மானிக்கப்பட்டுள்ள மசோதாவை அனைத்துக் கட்சியும் ஒருமனதாக நிறைவேற்றித் தர வேண்டும், எனக் கேட்டுக் கொண்டார்.

Views: - 183

0

0