மாபெரும் வாய்ப்பை வழங்கிய தமிழக மக்களுக்கு நன்றி : முதலமைச்சர் ஸ்டாலினின் முதல் டுவிட்..!!

7 May 2021, 3:30 pm
cm stalin - updatenews360
Quick Share

சென்னை : தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட திமுக தலைவர் முக ஸ்டாலின், தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.

சட்டசபை தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. இன்று சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில், தமிழக முதலமைச்சராக முக ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருடன் 34 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.

இதைத் தொடர்ந்து, கொரோனா நிவாரண நிதியாக 2.76 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4,000 வழங்கப்படும் உள்ளிட்ட 5 முக்கிய கோப்புகளில் அவர் கையெழுத்திட்டார்.

இந்த நிலையில், முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட முக ஸ்டாலின் தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்து டுவிட்டரில் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

அதில், கூறியிருப்பதாவது :- ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்’ என்று கூறி இன்று தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டேன்! காவிரிக் கரையாம் தஞ்சை மண்ணின் – திருவாரூரைச் சார்ந்த எனக்கு தாய்த் தமிழ்நாட்டுக்குச் சேவை செய்திட மாபெரும் வாய்ப்பை வழங்கிய தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி!, எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 190

0

0