சல்யூட் அடித்து தேசிய கொடியை வாங்கிய CM ஸ்டாலின் ; ராகுலிடம் ஒப்படைத்து பாரத யாத்திரையை தொடங்கி வைத்தார்…!!

Author: Babu Lakshmanan
7 September 2022, 6:18 pm
Quick Share

கன்னியாகுமரியில் ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரையை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

ஒற்றுமை யாத்திரை எனும் பாரத யாத்திரையை இந்தியா முழுவதும் மேற்கொள்ள காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி முடிவு செய்தார். இந்த நடை பயணத்தை இந்தியாவின் தென்கோடி முனையான கன்னியாகுமரியில் தொடங்கி வடமுனையான காஷ்மீரில் முடிக்கவும் திட்டமிட்டார்.

அதன்படி, கன்னியாகுமரியில் நடந்த யாத்திரையை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கதர் துணியால் ஆன தேசிய கொடியை ராகுல் காந்தியிடம் கொடுத்து யாத்திரையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.

இந்த நிகழ்ச்சியில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சத்தீஷ்கர் முதல்வர் பூபேஸ் பாகல் மற்றும் கட்சியின் அகில இந்திய தலைவர்கள், எம்.பி , எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டனர்.

ராகுல் காந்தியின் இந்த யாத்திரை தமிழகத்தில் தொடங்கி கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்திரபிரதேசம், அரியானா, டெல்லி, பஞ்சாப் வழியாக காஷ்மீர் சென்றடைகிறது. 12 மாநிலங்கள் வழியாக 3500 கிலோ மீட்டர் தூரம் மேற்கொள்ளப்படுகிறது.

Views: - 505

0

0