33 சதவீத மகளிருக்கான இடஒதுக்கீடு தொடர்பான மசோதா தாக்கலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- மகளிர் உரிமைக்கு 75 ஆண்டு காலமாக பாடுபட்டு வரும் தி.மு.க, மகளிர் ஒதுக்கீட்டை அன்றும் வரவேற்றது; இன்றும் வரவேற்கிறது!
சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்கள், குடியுரிமைத் திருத்தச் சட்டம், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து பறிப்பு சட்டம் மற்றும் முற்பட்ட சாதியினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டங்களை நிறைவேற்றுவதில் காட்டிய அக்கறையில் 100-ல் 1 விழுக்காடு கூட மகளிர் மசோதாவை நிறைவேற்ற மோடி அரசு காண்பிக்காதது ஏன்?
பெரும்பான்மை பலம் இருந்தும் கடந்த 9 ஆண்டு காலமாகப் பாராமுகமாக இருந்துவிட்டு, தேர்தல் நேர வண்ணஜாலம் காட்டி ஏமாற்ற நினைக்கும் முயற்சியை மக்கள் புரிந்துகொள்வார்கள்!
மக்கள் தொகைக் கணக்கெடுப்பு எப்போது நடத்தப்படும் என்ற உத்தரவாதம் இல்லை; நடைபெறாத மக்கள்தொகை கணக்கெடுப்பு, அதன் அடிப்படையிலான தொகுதி மறுவரையறை – அதன் பேரில் 2029-இல் அமலுக்கு வரப்போவதாக கூறப்படுவதற்கு இப்போது சட்டம் நிறைவேற்றும் விசித்திர தந்திரம் – எல்லாம் தோல்வி
பயம் ஏற்படுத்தும் தேர்தல் மாய்மாலம்!
தொகுதி மறுவரையறை என்ற பெயரில் தென்னிந்திய மக்களை, குறிப்பாக தமிழ்நாட்டு மக்களின் மக்களவைப் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் பேராபத்து – சூழ்ச்சி முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும்; தமிழ்நாட்டை வஞ்சிக்க மாட்டோம் என்ற உத்தரவாதத்தை ஒன்றிய அரசு இப்போதே தர வேண்டும்!
பிற்படுத்தப்பட்ட – மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயப் பெண்களுக்கும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையில் உள்ள நியாயத்தை பா.ஜ.க. அரசு பரிசீலிக்க வேண்டும்!, எனக் குறிப்பிட்டுள்ளார்.
பிரபலங்கள் திடீரென திருமணம் செய்வது குறைந்த வருடங்களில் வாழ்ந்து பின்னர் விவாகரத்து செய்வது அனைத்து துறையிலும் சகஜமான விஷயமாக மாறிவிட்டது.…
மிடில் கிளாஸ் மக்களின் கனவு! ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் சித்தார்த், மீதா ரகுநாத், சரத்குமார், தேவயானி, யோகி பாபு உள்ளிட்ட பலரது…
கோவை மாவட்டத்தில் தி.மு.க உறுப்பினர்கள் சேர்க்கை நடந்து வருகிறது.இதில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது…
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதி வெளிவரவுள்ளது. இதில்…
தி.மு.க நிர்வாகிகளை கைது செய்தால் மட்டுமே உடலை வாங்குவோம் என் உறவினர்கள் கோவை அரசு மருத்துவமனை பிணவறை முன்பு ஆர்ப்பாட்டத்தில்…
லோகேஷ் கனகராஜ்-ரஜினிகாந்த் கூட்டணி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 14 ஆம்…
This website uses cookies.