CM ஸ்டாலினின் ஒட்டுமொத்த குடும்பமும் சிறைக்கு செல்வார்கள்.. இபிஎஸ் ஒரு ஓட்டாண்டி : அதிமுக மூத்த தலைவர் பரபரப்பு பேச்சு!!
திருவள்ளூர் மாவட்டம் ஆண்டார்குப்பத்தில் வடக்கு மாவட்ட அதிமுக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கழகச் செயலாளர் முன்னாள் பொன்னேரி சட்டமன்ற பலராமன் தலைமையில் நடைபெற்றது.
இதில் முன்னாள் அதிமுக செய்தி தொடர்பாளர் பொன்னையன் வந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கி பேசுகையில்
அதிமுகவிற்கு பாஜக எதிரி. ஆனால் திமுகவிற்கு மிகப்பெரிய எதிரி.
அதனால் முதல்வர் ஸ்டாலின் அவர்களது குடும்பத்தினர் விரைவில் சிறைக்கு செல்வார்கள் என்றும் ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணத்தை எதுவும் செய்யாமல் அந்த நிதியில் ஆயிரம் ரூபாய் பணத்தை மகளிருக்கு வழங்கி அவர்களுக்கு துரோகம் செய்துள்ளார் என்றும் ஜெகத்ரட்சகனிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டவை உதயநிதி ஸ்டாலின் சபரீசன் ஆகியோரிடம் உள்ள 30 ஆயிரம் கோடிக்கும் குறைவானது என்றும், நிதி அமைச்சர் PTR தியாகராஜன் கூறியபடி ஆபத்தான நிலையில் தமிழகம் உள்ளது என்றும் துபாயில் பல்லாயிரக்கணக்கான கோடி முதலீடு செய்துள்ளதாகவும் புலனாய்வுத் துறையின் தீவிர விசாரணையில் உள்ளதாகவும் கூறினார்.
முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி சபரீசன் சிறைக்கு செல்வார்கள். அவர்கள் கூடாரம் மூழ்கி விடும் என்றும் பினாமிகளை நம்பி செயல்படுகிறார்கள். அவர்களின் பினாமிகளே அவர்களின் காலை வாரி விடுவார்கள் செந்தில் பாலாஜி அதற்கு ஒரு உதாரணமாக திகழ்கிறார் என்றும் குற்றம்சாட்டினார்.
துரோகி சசிகலா 9 சதவீதம் கமிஷனை பெற்றுக் கொண்டு இரண்டு சதவீதம் கமிஷனை கட்சிக்காக வழங்கினார் என்றும் ஆனால் எடப்பாடி பழனிசாமி அனைத்தையும் ஒன்றிய நகரச் செயலாளர்கள் மாவட்ட செயலாளர் என கட்சியினருக்கே வழங்கி ஓட்டாண்டியாக உள்ளார் என்றும் வருகின்ற தேர்தலில் பூத்கமிட்டி பணியாற்றுபவர்களுக்கு தேவையான பணத்தை ஒதுக்கும்படி அவரிடம் கூறியுள்ளதாகவும் எடப்பாடி பழனிச்சாமி அதனை செய்வார் என்றும் அவர் தெரிவித்தார்.
சிவகாசியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் 71வது பிறந்தநாள் விழாவை கொண்டாடுவது குறித்த அதிமுக நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.…
கிரிக்கெட்டின் தல கிரிக்கெட் ரசிகர்களால் தல என அழைக்கப்படுபவர் தோனி. இவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக திகழ்ந்தவர்…
தெலுங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டம், கொண்டாபூர் மண்டலம் கரகுர்த்தி கிராமத்தை சேர்ந்த சுபாஷ் (42), தனது மகன் மரியன் (13),…
திண்டுக்கல் மாநகராட்சி காமராசர் பேருந்து நிலையத்தில் இருந்து திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள மலைப்பகுதிக்கு செல்லும் 9 புதிய புற நகர் பேருந்துகள்,…
ஜேசன் சஞ்சய்யின் என்ட்ரி விஜய் தனது அரசியல் வாழ்க்கைக்காக சினிமாவை விட்டு விலகவுள்ள நிலையில் அவரது மகனான ஜேசன் சஞ்சய்…
கோவை விமான நிலையத்தில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசியவர், பாகிஸ்தான் மீதான இந்திய ராணுவத்தின்…
This website uses cookies.