திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் வரும் 6ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு!!

2 November 2020, 1:13 pm
CM Speech- Updatenews360
Quick Share

கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்பாக திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் 6ம் தேதி ஆய்வு மேற்கொள்கிறார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மாநிலத்தில் பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வரும் நிலையில், மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு, கொரோனா பாதிப்பு நிலவரம், தடுப்பு நடவடிக்கைகள் பற்றி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டறிந்து வருகிறார்.

பாதிப்புகள் அதிகம் உள்ள மாவட்டங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று, தொற்று தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட நிர்வாகங்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்பாக திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் 6ம் தேதி ஆய்வு மேற்கொள்கிறார். இந்த சுற்றுப்பயணத்தின் போது, பல்வேறு அரசு நலத்திட்டங்களையும் அவர் தொடங்கி வைக்க உள்ளார்.

Views: - 21

0

0

1 thought on “திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் வரும் 6ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு!!

Comments are closed.