கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தஞ்சையில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டம் உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக கடந்த 23ம் தேதியன்று அதிகாலை மாருதி கார் வெடித்துச் சிதறியது. அதில் உக்கடம் ஜி.எம். நகர் பகுதியை சேர்ந்த ஜமேசா முபின் என்பவர் உடல் கருகி உயிரிழந்தார். கார் வெடித்து சிதறிய இடத்தில் ஆணிகள் கோழிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டன.
இது குறித்து உக்கடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் முபினிடம், 2019ம் ஆண்டு தேசிய பாதுகாப்பு முகமை அமைப்பினர் அவரிடம் விசாரணை நடத்தியதும் தெரியவந்தது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய 6 பேரை உபா சட்டத்தில் கைது செய்த போலீசார், இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், தீவிரவாத தாக்குதல் திட்டம் தீட்டியதாக தகவல் வெளியான நிலையில், இந்த வழக்கின் விசாரணை என்ஐஏவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. என்ஐஏ அதிகாரிகளும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
கோவையில் கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக, தமிழகம் முழுவதும் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தஞ்சையில் ஆடக்காரத்தெரு, கொள்ளுப்பேட்டை தெரு, சையது அலிபாட்சா தெரு ஆகிய பகுதிகளில் உள்ள 3 பேரின் வீடுகளில் காவல் துறையினர் சோதனை மேற்கொண்டனர். சுமார் ஒருமணி நேரம் நடந்த சோதனையில் ஆவணங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என போலீசார் தெரிவித்தனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.