பைக்கில் வந்து சங்கிலியை பறித்த நிலை மாறி இப்ப காரில் … திராவிட மாடல் ஆட்சியின் அலங்கோலம் : பாஜக கடும் விமர்சனம்!!

Author: Babu Lakshmanan
16 May 2023, 1:31 pm
Quick Share

கோவையில் நடைபயிற்சிக்கு சென்ற பெண்ணிடம் காரில் வந்த மர்ம நபர்கள் செயினை பறிக்க முயன்ற சம்பவத்தை சுட்டிக்காட்டி நாராயணன் திருப்பதி விமர்சனம் செய்துள்ளார்.

கோவை பீளமேடு பகுதியை சேர்ந்தவர் கௌசல்யா. இவர் நேற்று காலை ஜீவி ரெசிடென்சி பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டு இருந்தார். இந்த நிலையில், அவரை வெள்ளை கார் ஒன்று பின் தொடர்ந்து வந்துள்ளது. அப்போது கௌசல்யாவிற்கு அருகில் வரும்போது, காரில் இருந்த மர்ம நபர்கள் கௌசல்யா கழுத்தில் அணிந்து இருந்த செயினை பறிக்க முயன்றுள்ளனர்.

அப்போது கௌசல்யா செயினை இறுக்கமாக பிடித்துக் கொண்டதால் சிறிது தூரம் காரில் இழுத்துச் செல்லப்பட்டு கீழே விழுந்தார். இதனையடுத்து, அந்த கார் அப்பகுதியில் நிற்காமல் சென்றுவிட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது அந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், இந்த செயின் பறிப்பு சம்பவத்தை குறிப்பிட்டு திராவிட மாடல் ஆட்சியில் சட்டம் ஒழுங்கின் அலங்கோலம் என பாஜக மாநிலத்துணைத் தலைவர்நாராயணன் திருப்பதி கடுமையாக சாடியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- இதுவரை பைக்கில் சங்கிலியை பறித்த நிலை போய் காரில் சென்று சங்கிலி பறிக்கும் நிலை. திராவிட மாடல் ஆட்சியில் சட்டம் ஒழுங்கின் அலங்கோலம், என விமர்சனம் செய்துள்ளார்.

Views: - 234

0

0