சென்னையை துரத்தும் கோவை.. புதிய உச்சம் பெற்ற குமரி : தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம்!!
Author: Udayachandran RadhaKrishnan20 January 2022, 7:56 pm
சென்னை : தமிழகத்தில் மேலும் 28,561 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மேலும் 28,561பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 30 லட்சத்து 42 ஆயிரத்து 796 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 79 ஆயிரத்து 205 ஆக அதிகரித்துள்ளது. இன்று 39 பேர் உயிரிழந்துள்ளார்.
இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 37 ஆயிரத்து 112 ஆக அதிகரித்துள்ளது. இன்று 19,479 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 28 லட்சத்து 26 ஆயிரத்து 479 ஆக அதிகரித்துள்ளது.
இதில் அதிகபட்சமாக சென்னையில் 7,520 பேருக்கும், இதற்கு அடுத்தபடியாக கோவையில் 3,390 பேருக்கும், மூன்றாவது இடத்தில் செங்கல்பட்டில் 2,196 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 738 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
1
0