தப்பு கணக்கு போட்டுட்டீங்களே ஸ்டாலின்.. கோவையில் இருந்து பறந்த கட்டுக்கட்டான புகார்கள்.. அதிர்ச்சியில் செந்தில் பாலாஜி!!

Author: Babu Lakshmanan
27 October 2021, 12:30 pm
Quick Share

கோவை மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்த கட்சியினரே அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருப்பது திமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வலுப்படுத்த முயற்சி

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று திமுக ஆட்சிக்கு வந்தாலும், கொங்கு மாவட்டங்களில் ஸ்டாலின் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை என்பதே நிதர்சனமான உண்மை. கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும், சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில் 10ல் தோல்வியையுமே சந்தித்துள்ளன.

CM stalin Order - Updatenews360

எனவே, மேற்கண்ட மாவட்டங்களோடு சேர்த்து அதிமுகவுக்கு அதிக ஆதரவுள்ள 10 மாவட்டங்களில் திமுகவை வலுப்படுத்தும் நோக்கில், மாவட்ட வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்துவதற்காக என்ற பெயரில் அமைச்சர்களை பொறுப்பாளர்களாக நியமனம் செய்து முதலமைச்சர் ஸ்டாலின் அண்மையில் உத்தரவிட்டிருந்தார்.

திமுகவினரே எதிர்ப்பு

அதன்படி, கோவை மாவட்டத்திற்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே, கட்சி விட்டு கட்சி தாவி வருவதால் திமுகவில் செந்தில் பாலாஜிக்கு எதிரான கோஷ்டி இருந்து வருவது வெளிப்படையாக தெரிந்த விஷயம்தான். இப்படியிருக்க, மாவட்ட பொறுப்பாளர்கள் மாற்றம், உள்ளாட்சி தேர்தல்களால் திமுகவில் தலைவிரித்தாடும் உட்கட்சி பூசலைக் கொண்டுள்ள கோவை மாவட்டத்திற்கு பொறுப்பாளராக அவரை நியமனம் செய்திருப்பது அக்கட்சியினருக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Minister senthil balaji - updatenews360

மேலும், முதலமைச்சர் ஸ்டாலினின் வீட்டிற்கே செந்தில் பாலாஜி குறித்த புகார் மனுக்களை கோவை மாவட்ட நிர்வாகிகள் அடுக்கடுக்காக அனுப்பியுள்ளார்களாம். அதில், தப்புக் கணக்கு போட்டுட்டீங்களே தலைவரே… என்றும், செந்தில் பாலாஜியை மாற்றுமாறும் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நொந்துபோன அமைச்சர்

அண்மையில், கோவை மாவட்டத்திற்கு வந்த அமைச்சர் செந்தில் பாலாஜியை வரவேற்க விமான நிலையத்தில் இருந்தே கூட்டம் அலைமோதியது. முதலில், இது எல்லாம் தனக்காக சேர்ந்தக் கூட்டம் என நினைத்து விட்ட அமைச்சருக்கு, பின்னர் வெளியான தகவலால் அதிர்ந்து போனாராம். கட்சியில் இருந்து நிர்வாகிகள் வெளியேறவும், கட்சிப் பணியாற்றாமல் ஒதுங்கக் கொள்ளுவதற்கும் இவர்தான் காரணம் என்று சக நிர்வாகிகளிடம் பிரச்சாரம் செய்வதற்காகத்தான் அந்தக் கூட்டம் குவிந்தது என்பது தெரிய வந்துள்ளது. இப்படி நடந்தால் யாராக இருந்தாலும் நொந்துதான் போவார்கள்.

செந்தில் பாலாஜி T0 கோவை கனெக்ட் செய்த முதலமைச்சர் ஸ்டாலினின் நடவடிக்கைக்கு என்ன ரியாக்ஷன் என்பதை பொறுத்திந்திருந்து தான் பார்க்க முடியும்.

Views: - 237

0

0