200க்கு கீழ் குறைந்த சென்னை பாதிப்பு… ஷாக் கொடுத்த கோவை : தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம்!!

Author: Udayachandran RadhaKrishnan
21 September 2021, 8:15 pm
Corona Status - Updatenews360
Quick Share

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று சற்று குறைந்துள்ளது.

கொரோனாவின் 2வது அலை பரவத் தொடங்கியதால் பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில நாட்களாக குறைந்து வந்த நிலையில் இரு நாட்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு அதிகரித்தது. இன்று மீண்டும் குறைந்துள்ளது.

இந்த நிலையில், இன்று 1,647 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,48,688 ஆக அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக, இன்று கோவையில் 218 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து, சென்னையில் 198 பேருக்கும், செங்கல்பட்டுவில் 109 பேருக்கும், ஈரோட்டில் 112 பேருக்கும், திருப்பூரில் 85 பேருக்கும் உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் இன்று 19 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35, 379 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 1,619 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதுவரையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25 லட்சத்து 96 ஆயிரத்து 316 ஆக அதிகரித்துள்ளது.

Views: - 111

0

0