கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இந்து அமைப்பினரின் வீடுகளில் பெட்ரோல் குண்டுவீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக 3 போரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பாக போலீசார் தரப்பில் கூறியிருப்பதாவது :- கோவை மாவட்டம் பொள்ளாச்சி உட்கோட்டமேற்கு காவல் நிலைய சரகத்தில் கடந்த 22.09.2022-ஆம் தேதி குமரன் நகரில் அமைந்துள்ள இந்து அமைப்புகளை சார்ந்த நிர்வாகிகளின் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த 2 நான்கு சக்கர வாகனம் 2 ஆட்டோ மற்றும் 1டாட்டா ஏசி வாகனத்தின் கண்ணாடிகளை சேதப்படுத்தியும், மேற்படி 2 வாகனங்களின் மீது டீசல் திரவத்தை ஊற்றியும் உள்ளனர்.
இது சம்மந்தமாக பொள்ளாச்சி மேற்கு காவல்நிலையத்தில் 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கில் தொடர்புடைய எதிரிகளை விரைந்து கைது செய்யும் பொருட்டு மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர் உத்தரவின் பேரில், கோவை
சரக காவல்துறை துணைத்தலைவர்முத்துசாமி மேற்பார்வையில், மாவட்டக் காவல்கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் அவர்கள் வழிகாட்டுதலின் பேரிலும், பொள்ளாச்சி துணைக் காவல் கண்காணிப்பாளர் தீபா சுஜாதா அவர் கள்தலைமையில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனை செய்தும், அப்பகுதியில் உள்ள சுமார் 250-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தும் 500க்கும் மேற்பட்ட நபர்களின் அலைபேசி எண்களை ஆய்வு செய்தும் சந்தேக நபர்களை தொடந்து கண்காணித்து விசாரணை மேற்கொண்டனர்.
இதில், கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ததில் பொள்ளாச்சியை சேர்ந்த ஜமால் மைஜதீன் என்பவருடைய மகன் முகமது ரபிக்(26) (ஐவுளிக்கடை தொழில்) பொள்ளாச்சியை சேர்ந்த மகாத்மாகாந்தி வீதியை சேர்ந்த அக்பர் என்பவரது மகன் ரமீஸ் ராஜா(36) மற்றும் இசாக் என்பவருடைய மகன் மாலிக்(௭)சாதிக் பாஷா(32) ஆகியோர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.