வேட்டியை மடித்துக் கட்டி வயலில் இறங்கிய அமைச்சர் எஸ்பி வேலுமணி : நாற்று நடவு செய்து நெகிழ்ச்சி..!!

8 October 2020, 4:17 pm
sp velumani 2 - updatenews360
Quick Share

கோவை சாடிவயல் பகுதியில் மலைவாழ் மக்களுடன் மக்களாக இணைந்து அமைச்சர் எஸ்.பி. வேலுமணி
வயலில் நெல் நாற்று நடவு செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவையை பூர்வீகமாகக் கொண்ட அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, தனது சொந்த மாவட்டத்தில், மக்களுக்கு தேவையான பல்வேறு திட்டப் பணிகளை அமல்படுத்தி வருகிறார். அவ்வாறு தான் தொடங்கி வைக்கப்படும் பணிகளின் நிலவரங்களையும் அடிக்கடி கள ஆய்வு மேற்கொள்வதை அவர் வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.

அந்த வகையில், கோவை மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் ஏராளமான மலைவாழ் மக்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் சார்பில் பல்வேறு சலுகைகளும், அவர்களுடைய வாழ்வாதாரத்திற்காக பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

SP Velumani - Updatenews360

இந்த நிலையில், கொரோனா சமயத்தில் மலைவாழ் மக்களுக்கு அளிக்கப்பட்ட சலுகைகள் முறையாக சென்றடைந்துள்ளனவா..? என்பது குறித்து ஆய்வு செய்ய, அமைச்சர் எஸ்பி வேலுமணி சாடிவயல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு நேரில் சென்றார். அங்கு, மலைவாழ் மக்களை நேரில் சந்தித்து அவர்களுடைய கோரிக்கைகளையும் அவர்களுக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளையும் ஆய்வு செய்தார்.

அப்போது, கல் குத்தி பதி என்னும் பகுதியில் வயல் வெளியில் வேலை செய்து கொண்டிருந்த மக்களையும் சந்தித்து பேசினார். திடீரென யாரும் எதிர்பார்க்காத நிலையில், வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு, மக்களுடன் மக்களாக வயலில் இறங்கி, நெல் நாற்று நடவு செய்தார். அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் இந்த எளிமையான செயலைக் கண்டு, மலைவாழ் மக்கள் பூரித்து போனதுடன், அமைச்சருடன் இணைந்து மகிழ்ச்சியுடன் நாற்றுகளை நடவு செய்தனர்.

பின்னர், மலைவாழ் மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் உடனடியாக தங்குதடையின்றி செய்து கொடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட அவர், இந்த பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் எவ்வாறு உள்ளது, மேலும் இந்த பகுதியை சேர்ந்த மலைவாழ் மக்களுக்கு எந்த மாதிரியான பயிர்கள் விதை பயிர்கள் தேவைப்படுகின்றன என்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

அரசின் திட்டப் பணிகளை ஆய்வு செய்ய சென்ற அமைச்சர் எஸ்பி வேலுமணி, திடீரென வயலில் இறங்கி விவசாயப் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டது அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

Views: - 57

0

0