ஆதார், ரேஷன் கார்டு நகல் இருந்தால் எளிதில் கிடைக்கும் இ-பாஸ்..! 17ம் தேதி முதல் தளர்வுகளை அறிவித்த தமிழக அரசு..!

14 August 2020, 2:51 pm
Edappadi palanisamy - updatenews360
Quick Share

சென்னை : தமிழகத்தில் வரும் 17ம் தேதி முதல் இ-பாஸ் நடைமுறையில் புதிய தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- அம்மாவின்‌ அரசு கொரோனா தொற்றிலிருந்து பொதுமக்களை பாதுகாத்து, அவர்களுக்கு தேவையான நோய்‌ தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தும்‌, சிகிச்சைகளை அளித்தும்‌, நிவாணங்களை வழங்கியும்‌ முனைப்புடன்‌ செயல்பட்டு வருகிறது. நோய்த்‌ தொற்றின்‌ போக்கு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, பொது மக்களின்‌ ஒத்துழைப்பையும்‌, நோய்த்‌ தொற்றின்‌ நிலையையும்‌ கருத்தில்‌ கொண்டு, ஊாடங்கில்‌ படிப்படியாக தளர்வுகள்‌ வழங்கப்பட்டு வருகிறது.

நோய்த்‌ தொற்று பாவுவதை தடுக்க, திருமணம்‌, அவசர மருத்துவம்‌, நெருங்கிய உறவினர்‌ மரணம்‌, பணி சம்பந்தமாக பயணித்தல்‌, வெளியிடங்களுக்குச்‌ சென்று சொந்த ஊர்‌ திரும்புதல்‌ ஆகிய காரணங்களுக்காக மட்டும்‌ மாவட்டங்களுக்கு இடையே பயனரிக்க விண்ணப்பிக்கப்படும்‌ இ-பாஸ் விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இதன்‌ மூலம்‌ மாவட்டம்‌ விட்டு மாவட்டம்‌ செல்பவர்கள்‌ கண்காணிக்கப்பட்டு, நோய்த்‌ தொற்று ஏற்பட்டால்‌ அவர்களுடன்‌ தொடர்புடையவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தும்‌ பணிகள்‌ மேற்கொள்ளப்படுகின்றன.

இந்நிலையில்‌, பொதுமக்கள்‌ முக்கிய பணிகளுக்கு தடையின்றி தமிழ்நாடு முழுவதும்‌ பயணிக்க (மாவட்டங்களுக்கு இடையே) 17.8.2020 முதல்‌ ஆதார்‌ அல்லது குடும்ப அட்டை விவரங்களுடன்‌ தொலைபேசி / அலைபேசி எண்ணுடன்‌ விண்ணப்பித்தால்‌, இ-பாஸ் அனுமதி உத்தரவிட்டுள்ளேன்‌.

பொதுமக்களின்‌ நலன்‌ கருதி எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவை, அனைவரும்‌ பொறுப்புடன்‌ பயன்படுத்தி தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும்‌, தவிர்க்க இயலாத பணிகளுக்கு மட்டும்‌ இ-பாஸ்க்கு விண்ணப்பம்‌ செய்து, இ-பாஸ் பெற்று பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்‌.

கொரோனா நோய்‌ பரவலை கட்டுப்படுத்த அரசின்‌ நிலையான வழிகாட்டி நடைமுறைகளை கடைபிடிக்கவும்‌, அரசின்‌ நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவும்‌ பொதுமக்களை அன்புடன்‌ கேட்டுக்‌ கொள்கிறேன்‌,எனத் தெரிவித்துள்ளார்.

Views: - 38

0

0