பயிர்க்கடன் தள்ளுபடி சிறப்பான நடவடிக்கை : தமிழக அரசை புகழ்ந்த இந்திய கம்யூனிஸ்ட்… அதிர்ச்சியில் ஸ்டாலின்..!!!

6 February 2021, 1:48 pm
EPS - CPI - updatenews360
Quick Share

சென்னை : ரூ.12,000 கோடி விவசாய பயிர்க்கடனை தள்ளுபடி செய்வதாக அறிவித்த தமிழக அரசின் நடவடிக்கைக்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டு தெரிவித்திருப்பது திமுகவை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேளாண் துறைக்கான புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், 16.43 லட்சம் விவசாயிகள் பயன் பெறும் வகையில், சுமார் ரூ. 12,110 கோடி கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவித்தார். முதலமைச்சரின் இந்த அறிவிப்பிற்கு, விவசாயிகளும், அரசியல் தலைவர்களும் வரவேற்பும், பாராட்டும் தெரிவித்து வருகின்றனர்.

Cm eps farm land - updatenews360

அரசின் நடவடிக்கைகளை பாராட்டியும், புகழ்ந்தும் பேசுவது, பொதுவாக அக்கட்சியுடன் கூட்டணியில் இருக்கும் பிற கட்சிகள் பேசுவது வாடிக்கையான ஒன்றுதான். ஆனால், எதிர்கட்சியின் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சி, பாராட்டுவதுதான் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் செயலாக இருக்கும். அந்த வகையில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, அதிமுக அரசின் இந்த நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்திருப்பது, அரசியல் கட்சிகளின் புருவத்தை தூக்கும் விதமாக அமைந்துள்ளது.

இது தொடர்பாக, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் வே.துரைமாணிக்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :- விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்திருப்பது வரவேற்கத்தக்கது 2019 – 2020 ஆண்டுகளில் கொரோனா பெருந்தொற்றின் காரணமாகவும், நிவர், புரெவி புயல் காரணமாகவும், கடந்த மாதம் பருவம் தவறி பெய்த பெருமழையின் காரணமாக விவசாயிகள் கடன் பெற்று விளைவித்த நெல் மற்றும் புன்செய் பயிர்கள் பெருமளவு அழிந்து விட்டன. இவற்றின் காரணமாக விவசாயிகள் பெரும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டனர்.

நெருக்கடியிலிருந்து எப்படி மீண்டு வருவது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தனர். இந்தச் சூழலில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கமும், இதர சங்கங்களும் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டுமென்றும், பயிரிழப்புக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென்றும் வற்புறுத்தி தொடர்ந்து பல போராட்டங்கள் நடத்தி வந்தன. இந்தச் சூழலில் 05.02.2021 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் தமிழக முதல்வர் 31.01.2021 நிலவரப்படி கூட்டுறவு வங்கிகளில் கடன்பெற்ற 16.43 லட்சம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் 12,110 கோடி ரூபாயையும் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்துள்ளார்.

cpm - updatenews360

இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது. காலம் தாழ்த்தாமல் அதற்கான நிதிஒதுக்கி அறிவிப்பின்படி தள்ளுபடி செய்திட வேண்டும். கூட்டுறவு வங்கிகளில் கடன்பெற முடியாதவர்கள் அரசு, மற்றும் வணிக வங்கிகளில் பெற்றுள்ள கடன்களையும் தள்ளுபடி செய்திட தகுந்த நடவடிக்கை எடுத்திட வேண்டும். இதுவரை வழங்கப்படாமல் உள்ள பயிர்காப்பீட்டுத் தொகை கிடைத்திடவும் நடவடிக்கை எடுத்திட வேண்டுமென்றும் வற்புறுத்துகிறோம், எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் வேளையில் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் பிரச்சாரத்தை அதிமுக புயலை கிளப்பிக் கொண்டு சென்று கொண்டிருக்கிறது. ஆனால், வடநாட்டு தேர்தல் ஆலோசகரின் அறிவுறுத்தலின்படி செயல்பட்டு வரும் திமுக, ‘இலக்கு 200’ என்பதை தீர்மானித்து செயல்படுவது, கூட்டணி கட்சிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. டசன் கணக்கில் கட்சிகளை வைத்துக் கொண்டு வெறும் 34 தொகுதிகளை மட்டுமே வழங்குவது, அந்தக் கட்சிகளின் பலத்தை குறைக்கும் செயலாக இருப்பதாக அரசியல் வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர்.

ஒவ்வொரு கட்சிக்கும் ஒன்று, இரண்டு, மூன்று என ஒற்றை இலக்கிலான சீட்களை வழங்கும் திமுகவின் முடிவால், மேற்கொண்டு கூட்டணியில் தொடர அனைத்து கட்சிகளும் தயக்கம் காட்டி வருகின்றன. எனவே, எந்த நேரத்தில் எந்த கட்சி திமுகவுடனான கூட்டணியை முறித்துக் கொள்ளும் என்ற எதிர்பார்ப்பு பெருகி வருகிறது.

இந்த சூழலில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் இந்த அறிவிப்பை இந்திய கம்யூனிஸ்ட் பாராட்டியிருப்பது, திமுகவினருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவுடன் இந்திய கம்யூனிஸ்ட் ஏற்கனவே கூட்டணி வைத்துள்ள அனுபவம் இருக்கிறது. கட்சியின் சுய மரியாதையை காரணமாக வைத்து, இந்த முறை திமுகவில் இருந்து வெளியேறி, அதிமுகவில் இணைந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. ஒருவேளை இந்திய கம்யூனிஸ்ட் அதிமுகவை நோக்கி புறப்பட்டால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டும் நடையை கட்டும் என்பதில் சந்தேகமும் இல்லை.

Views: - 24

0

0