சாக்கடை நீரை அகற்றாமல் கான்கிரீட் : மக்கள் பணத்தை இப்படியா கொட்டுவது..? வைரலாகும் வீடியோ.. மக்கள் கடும் எதிர்ப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
4 November 2022, 2:31 pm
Drainage Concrete - Updatenews360
Quick Share

சேலம் : தேங்கி நிற்கும் சாக்கடை நீரை அகற்றாமல் கான்கிரீட் கலவை கொடி கால்வாய் அமைக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் அழகாபுரம் அத்வைத ஆசிரம சாலையில் கால்வாய் அமைக்கும் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் சேரும் சகதியும் நிறைந்திருந்தது.

இந்த நிலையில் அதை அகற்றாமல், கான்கீரிட் கலவை கொட்டி மாநகராட்சி ஊழியர்கள் கால்வாய் அமைத்ததாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மேலும் நடவடிக்கை எடுக்க மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். சாக்கடை நீரை அகற்றாமல் கான்கீரிட் கலவை கொட்டிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில், இந்த வீடியோவை பகிரிந்த பாஜக நிர்வாகி சிடிஆர் நிர்மல்குமார் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். அதில் சொந்த வீட்டுக்கு இந்த மாதிரி கான்கிரீட் போடுவீங்களா?

மக்களின் உழைப்பில் இருந்து வந்த பணத்தை இப்படியா கொட்டுவது?
இடம்: சேலம் மாநகராட்சி 17 வது வார்டு புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள அத்வைதா ஆசிரமம் ரோட்டில் சாக்கடை நீரை அகற்றாமல் கான்கிரீட்

என பதிவிட்டு திமுக தலைமை கழகமான அண்ணா அறிவாலயத்திற்கு டேக் செய்துள்ளார். இந்த பதிவுக்கு நெட்டிசன்களும் தமிழக அரசுக்கு எதிராக விமர்சனம் செய்து வருகின்றனர்.

Views: - 329

0

0